போர் தொடுக்க 'கொரோனாவ' பரப்பல... ஆனா வேற ஒரு 'காரணம்' இருக்கு... சீனாவுக்கு 'எச்சரிக்கை' விடுத்த அமெரிக்கா!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Apr 18, 2020 01:18 AM

கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்கா, சீனா இரு நாடுகளும் மாற்றி,மாற்றி ஒன்றையொன்று குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் லேட்டஸ்டாக சீனா மீது விசாரணை நடந்து வருவதால் எச்சரிக்கையாக இருக்கும்படி சீனாவுக்கு, அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.

US investigates whether coronavirus originated in Wuhan lab

இதுதொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்து இருக்கிறார். இந்த விவகாரத்தில் சீனா உண்மையை மறைப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மிக் பாம்பியோ தெரிவித்து இருக்கிறார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில்,'' சீனா, அமெரிக்கா மீது உயிரியல் போர் தொடுக்க கொரோனா வைரஸை பரப்பவில்லை என்றாலும் வேறு ஒரு காரணம் உள்ளது.  அமெரிக்க விஞ்ஞானிகளைக் காட்டிலும் சீன விஞ்ஞானிகள் வைரஸ் சோதனையில் தலைசிறந்தவர்கள் எனக் காட்டிக்கொள்ள மடத்தனமாக சோதனை மேற்கொண்டுள்ளனர். இவர்களது அஜாக்கிரதையால் வைரஸ் வெளியே கசிந்துள்ளது,'' என வெளிப்படையாக குற்றஞ்சாட்டி இருக்கிறார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது.