ஷ்ரத்தா கொலை வழக்கு பாணியில் மற்றுமொரு இந்தியப் பெண்ணை கொன்ற பங்களாதேஷ் காதலன்.!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By K Sivasankar | Nov 19, 2022 04:33 PM

Bangladesh: டெல்லியில் ஷ்ரத்தா என்கிற இளம் பெண் காதலனால் கொல்லப்பட்டு உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. மேலும் சில உடல் பாகங்களை தன் வீட்டில் பிரிட்ஜில் வைத்திருந்த கொலையாளி அப்தாப் இன்னொரு பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்த சம்பவம் உட்பட பல சம்பவங்கள் இது தொடர்பாக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தன.

Like Shraddha murder, Abu Bakr Kavitha Rani Case in Bangladesh

இந்தியாவை உலுக்கிய இந்த வழக்கு விசாரணை நடந்துவரும் சமயத்தில் இதே பாணியில் பங்களாதேஷில் நடந்திருக்கும் பரபரப்பு சம்பவம் அதிர்வடையச் செய்துள்ளது. அபூபக்கர் என்கிற இளைஞர் கவிதா ராணி என்கிற இந்திய பெண்ணை வெட்டி கொலை செய்திருக்கிறார். மேலும் அந்த பெண்ணை துண்டு துண்டாக வெட்டியும் கழுத்தை நெரித்து கொன்றும் கொடூரம் செய்துள்ளார்.

வங்கதேசத்தின் குல்னா மாவட்டத்தில் உள்ள சோனடங்கா என்கிற இடத்தில் வசித்து வரும் அபூபக்கர் கடந்த நவம்பர் 6ஆம் தேதி வேலைக்கு வரவில்லை என்பதால் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு சக ஊழியர்கள் முயற்சித்த போது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அவருடைய வீட்டு கதவு வெளியில் பூட்டப்பட்டிருந்தது. ஆனாலும் அபூபக்கர் காணாமல் போனது குறித்து சந்தேகம் அடைந்த வீட்டு உரிமையாளர் காவல்துறைக்கு தகவல் கொடுக்கவே, போலீசார் வந்து அபூபக்கரின் வீட்டை சோதனை செய்திருக்கின்றனர்.

அப்போதுதான் அபூபக்கர் வீட்டில் ஒரு பெண்ணின் சடலம் வெட்டப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வெட்டிக் கொல்லப்பட்டவர் அபூபக்கரின் காதலி கவிதா ராணி என்கிற தகவல் கிடைக்கப்பெற்றது. இந்தியாவைச் சேர்ந்த கவிதா ராணி சமீபத்தில் தான் அபூபக்கருக்கு நெருக்கமாகி இருக்கிறார். ஆனால் அபூ பக்கரோ சப்னா எனும் தன் காதலியுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்துள்ளார்.

அபூ பக்கர் கவிதா ராணியை எப்படியோ காதலித்து வந்த நிலையில், கவிதா ராணியை கொலை செய்வதற்கு ஐந்து நாட்களுக்கு முன்புதான் நேரில் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அபூபக்கரின் காதலி சப்னா வெளியே சென்ற நேரம் தன் வீட்டுக்கு கவிதா ராணியை அபூ பக்கர் வரவழைத்துள்ளார்.  அப்போது வீட்டை நோட்டமிட்ட கவிதா ராணி, அபூ பக்கர் ஏற்கனவே வேறொரு பெண்ணுடன் இருப்பதை அறிந்துகொண்டு, சந்தேகத்தின் பேரில் அபூபக்கருக்கு திருமணம் ஆகிவிட்டதா என்கிற கேள்விகளை கேட்க இந்த தொடர் உரையாடல் ஒரு கட்டத்தில் வாக்குவாதமாக மாறி இருப்பதாக தெரிகிறது.

பின்னர் ஆத்திரமடைந்த அபூபக்கர் கவிதாவின் கழுத்தை நெரித்துக் கொன்றதுடன் அவருடைய உடலை துண்டு துண்டாக வெட்டியுமுள்ளார். அதன் பிறகு அபுபக்கர் தன் காதலி சப்னாவை அழைத்துக் கொண்டு டாக்காவிற்கு சென்று விட்டார். இந்த விஷயங்களை அறிந்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பின்னர், காஜிபூர் மாவட்டத்தின் பாசன் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சவுரஸ்தா என்கிற பகுதியில் கொலையாளி அபூபக்கரையும் அவருடைய காதலி சப்னாவையும் கண்டுபிடித்துள்ளனர்.  விசாரணையில் செய்த தவறை அபூபக்கர் . அதன் பிறகு அபூபக்கரின் வாக்குமூலத்தின்படி பாலித்தீன் கவலையில் சுற்றப்பட்ட கவிதாவின் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்கள் மீட்டெடுக்கப்பட்டன. அபூபக்கர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் இந்தியாவை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

Tags : #SHRADDHA #SHRADHDHA CASE #AFTAB #SHRADDHA AFTAB #ABU BAKR #KAVITHA RANI #BANGLADESH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Like Shraddha murder, Abu Bakr Kavitha Rani Case in Bangladesh | India News.