"இப்டி தான் அன்னைக்கி ராத்திரி சண்டை நடந்துச்சு".. ஷ்ரத்தா கொலை வழக்கில் பகீர் கிளப்பிய அஃப்தாப்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம், கடும் அதிர்வலைகளை தொடர்ந்து ஏற்படுத்தி வரும் நிலையில், அடுத்தடுத்து வெளியாகும் தகவலும் இன்னும் பதற்றத்தை உருவாக்கி வருகிறது.

டெல்லியில் தனது காதலருடன் இணைந்து வாழ்ந்து வந்த இளம்பெண் ஷ்ரத்தா திடீரென நீண்ட நாளாக காணாமல் போயுள்ளார்.
அப்படி ஒரு சூழலில் இது குறித்து ஷ்ரத்தாவின் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து, ஷ்ரத்தாவுடன் லிவிங் டுகெதர் ரிலேஷனில் இருந்து வந்த அவரது காதலர் அஃப்தாப்பை போலீசார் விசாரித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஷ்ரத்தா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அஃப்தாப்பை அடிக்கடி வற்புறுத்தியிருக்கிறார். அப்படி ஒரு சூழலில் ஆத்திரமடைந்த அஃப்தாப், ஷ்ரத்தாவை கொலை செய்து அவருடைய உடலை 35 பாகங்களாக வெட்டி, ஃபிரிட்ஜில் வைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமும் இரவு 2 மணியளவில் உடல் பாகங்களை எடுத்துச் சென்று டெல்லியின் பல்வேறு பகுதிகளில் அஃப்தாப் வீசியதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து, காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வந்தனர். அமீன் மீது IPC 302 (கொலை), 201 (தடயங்களை அழிக்க முயற்சித்தல்) ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த மே மாதமே ஷ்ரத்தா கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், நீண்ட நாட்களாக அவர் யாருடனும் தொடர்பில் இல்லாமல் போனதன் சந்தேகத்தில் தான் அஃப்தாப் விசாரணை வளையத்தில் வந்தார். ஆரம்பத்தில் சண்டை போட்டு விட்டு வீட்டில் இருந்து ஷ்ரத்தா வெளியேறியதாக போலீசாரிடம் அஃப்தாப் தெரிவித்திருந்த நிலையில், அதன் பின்னர் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டது மற்றும் ஷ்ரத்தா இன்ஸ்டாகிராம் கணக்கு ஆக்டிவாக இருந்ததன் பெயரில் தான் அஃப்தாப் சிக்கி கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டிருந்தார்.
அப்படி ஒரு சூழலில், ஷ்ரத்தா கொலை வழக்கு தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், ஷ்ரத்தா கொலை செய்யப்பட்ட அன்றிரவு என்ன நடந்தது என்பது குறித்து சில பரபரப்பு தகவல்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒன்றாக வாழ்ந்து வந்த ஷ்ரத்தா - அஃப்தாப் ஜோடி அடிக்கடி சண்டை போட்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஷ்ரத்தாவின் நண்பர்கள் மற்றும் அவரை தெரிந்தவர்கள் கூட அடிக்கடி சண்டை போடுவதையும் ஒருசில முறை ஷ்ரத்தாவை அஃப்தாப் அடித்தது குறித்தும் வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
அப்படி தான், ஷ்ரத்தா கொலை செய்யப்பட்ட மே 18 ஆம் தேதியும் இருவருக்கும் இடையே சண்டை தொடங்கி உள்ளது. வீட்டு பொருட்களை மும்பையில் தங்கி இருந்த இடத்தில் இருந்து புதிய வீட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக அவர்களுக்கு தகராறு உருவான நிலையில், அடுத்தடுத்து வெவ்வேறு பிரச்சனைகளுக்குள்ளும் இந்த விவாகரம் சென்றதில் தான் அஃப்தாப் கோபம் அடைந்துள்ளார். ஏற்கனவே அடிக்கடி திருமணம் செய்ய ஷ்ரத்தா கூறி வந்ததால் எல்லா கோபமும் சேர்ந்து, ஷ்ரத்தாவை அன்று கொலை செய்ததும் தற்போது விசாரணையில் தெரிய வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மற்ற செய்திகள்
