'நீங்க உங்க இஷ்டத்துக்கு ஐபிஎல் நடத்துவீங்க... நாங்க எங்க ப்ளேயர்ஸ் அனுப்பனுமா'?.. பிசிசிஐ-யிடம் கராராக சொன்ன கிரிக்கெட் வாரியம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனாவால் தடைபட்ட 2021 ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்த தீவிரமாக இயங்கி வரும் பிசிசிஐ-க்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் நடைபெற்ற 2021 ஐபிஎல் சீசன் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பாதியிலேயே தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் மீதமுள்ள ஆட்டங்களை அமீரகத்தில் நடத்த பிசிசிஐ சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
எனினும், அதே செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில், பல வெளிநாட்டு வீரர்கள் வேறு சில சர்வதேச, உள்நாட்டு தொடர்களில் விளையாட இருப்பதால், மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் அவர்கள் பங்கேற்பார்களா என்பது சந்தேகத்திலேயே இருந்து வருகிறது.
இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ஷகிப் அல் ஹசன் (shakib al hasan) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் முஸ்தபிசூர் ரஹ்மான் (mustafizur rahman) உள்ளிட்டோர் பங்கேற்க தடையில்லாச் சான்றிதழ் வழங்க முடியாது என வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜ்முல் ஹசன் தெரிவித்துள்ளார். இதனால் வங்கதேச வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கமாட்டார்கள் என உறுதிபடத் தெரியவந்துள்ளது.
மேலும், கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஏற்கனவே புள்ளிப்பட்டியலில் மோசமான நிலையில் இருப்பதால், இவர்கள் அணியில் இடம்பெறாமல் போவது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். கொல்கத்தா அணியை பொறுத்தவரை கேப்டன் மார்கன், அதிரடி ஆட்டகாரர் கம்மின்ஸ் ஆகியோர் மீதமுள்ள ஐபிஎல் தொடரில் இடம்பெறமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஷிகிப் அல் ஹசனும் இல்லாமல் போவது, கொல்கத்தா அணிக்கு பலத்த அடியாக அமைந்துள்ளது.

மற்ற செய்திகள்
