"என்னப்பா ஒரு ரவுண்டு போவோமா?".. ருத்துராஜ், கேதார் ஜாதவுடன் புது காரில் வலம் வந்த தோனி.. வைரல் வீடியோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன்காலில் ஒருவராக விளங்கியவர் தோனி. டி 20 உலக கோப்பை, ஐம்பது ஓவர் உலக கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என மூன்று டிராபிகளையும் வென்ற ஒரே கேப்டனும் தோனி தான்.
இந்திய அணிக்காக சிறந்த பங்களிப்பை ஆற்றி ஓய்வு பெற்றிருந்த தோனி, தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் ஆடி வருகிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முதல் ஐபிஎல் சீசனில் இருந்தே தலைமை தாங்கி வரும் தோனி, இதுவரை 4 ஐபிஎல் கோப்பைகளையும் வென்று அசத்தி உள்ளார். 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெற உள்ள நிலையில், இதற்கான மினி ஏலம் டிசம்பர் 23 ஆம் தேதியன்று நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இதற்கு முன்பாக, மொத்தமுள்ள 10 ஐபிஎல் அணிகளும் தங்கள் அணியில் தக்க வைத்துக் கொண்டுள்ள வீரர்கள் பட்டியல் மற்றும் விடுவித்த வீரர்கள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஜடேஜா, ருத்துராஜ், மொயீன் அலி, ராயுடு, டெவான் கான்வே உள்ளிட்ட பல வீரர்களை மீண்டும் அணியில் தக்க வைத்துக் கொண்டது. மறுபக்கம் பிராவோ, க்றிஸ் ஜோர்டன், ஜெகதீசன் உள்ளிட்ட 8 வீரர்களை விடுவிக்கவும் செய்திருந்தது.
டிசம்பரில் நடைபெற உள்ள ஐபிஎல் மினி ஏலத்திலும் மற்ற அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் இருந்து சிறந்த வீரரை தேர்வு செய்ய சிஎஸ்கே நிர்வாகம் மற்றும் தோனி ஆகியோர் முனைப்பு காட்டுவார்கள் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
அப்படி ஒரு சூழலில், தோனி தனது புதிய காரில் ருத்துராஜ் மற்றும் கேதார் ஜாதவ் ஆகியோருடன் பயணம் செய்த வீடியோ, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. கார்கள் மற்றும் பைக்குகள் மீது அதிக நாட்டமுள்ள தோனியிடம் ஏராளமான வண்டிகளின் கலெக்ஷன்களே உள்ளது. அப்படி ஒரு சூழலில், தற்போது SUV - Kia EV6 கார் ஒன்றை தற்போது தோனி வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனைத் தொடர்ந்து, தனது புதிய காரில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ருத்துராஜ், கேதார் ஜாதவ் உள்ளிட்டோரும் இருந்தனர். ராஞ்சி பகுதியில் இந்த காரில் அவர்கள் அனைவரும் ரைடு போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ருத்துராஜ் ஏற்கனவே சிஎஸ்கே அணியில் தக்க வைக்கப்பட்டுள்ள நிலையில், கேதார் ஜாதவ் இதற்கு சிஎஸ்கே அணிக்காக பல போட்டிகள் ஆடி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.