நெருங்கும் உலகக்கோப்பை தொடர்!.. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் போட்ட மெகா ஸ்கெட்ச்!.. பிசிசிஐ-க்கு கடும் நெருக்கடி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக்கோப்பை தொடருக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி வியூகத்தை கையிலெடுத்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த ஐசிசி திட்டமிட்டு வருகிறது. முதலில் இந்தியாவில் நடைபெறவிருந்த இந்த தொடர், கொரோனா காரணமாக அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்த பிறகு, சாம்பியன்ஸ் டிராபி, 2022 டி20 உலகக்கோப்பை என வரிசையாக ஐசிசி தொடர்கள் வரவுள்ளன.
இந்நிலையில், ஐசிசியின் இரண்டு 50 ஓவர்கள் உலகக்கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் வியூகம் வகுத்துள்ளது. அதாவது 2027 மற்றும் 2031 ஐசிசி தொடர்களை பாகிஸ்தானில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுகளில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடர்களை பாகிஸ்தான், தனி நாடாக நடத்துவதற்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.
ஏனெனில், பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாக கடந்த 1996ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பின்னர் இதுவரை எந்த ஒரு தொடரையும் அங்கு நடத்தவில்லை. எனவே, வங்கதேசம் மற்றும் இலங்கை வாரியங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்நாடுகளுடன் இணைந்து உலகக்கோப்பை தொடர்களை நடத்திவிட பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ கடிதமும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
50 ஓவர் உலகக்கோப்பை தொடர் மட்டுமின்றி, டி20 உலகக்கோப்பை தொடர்களுக்கும் பாகிஸ்தான் திட்டம் போட்டுள்ளது. அதாவது அடுத்து 2031ம் ஆண்டுக்குள் வரக்கூடிய 4 டி20 உலகக்கோப்பை தொடர்களில் இரண்டினை பாகிஸ்தானில் நடத்த திட்டமிட்டுள்ளது. இவற்றை இங்கிலாந்து வாரியத்துடன் சேர்ந்து நடத்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பாகிஸ்தானில் தற்போது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மைதானங்களை உருவாக்குவதற்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. தற்போதைக்கு கராச்சி, லாகூர், முல்தான், ராவல்பிண்டி, பெஷாவர் என 5 முக்கிய மைதானங்கள் அந்நாட்டில் உள்ளன. இந்த எண்ணிக்கை வரும் வருடங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.