உன் மூஞ்சிய கண்ணாடில பாரு.. நாய் கூட பாக்காது.. வாந்தி எடுத்துட்டு போய்டும்.. ஏன்? என்ன ஆச்சு?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Oct 30, 2019 05:50 PM

நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் அனந்திதாவுடன் புகைப்படம் எடுத்து எனது ''பேபி டால் அனந்திதா சுந்தர்'' என தெரிவித்து இருந்தார். இந்த புகைப்படத்துக்கு பலரும் லைக் போட்டு, குஷ்புவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Kushbhu blasts netizen for body shaming her daughter

ஆனால் ஒருசிலர் அனந்திதாவின் உருவத்தை வைத்து கேலி செய்திருந்தனர். குறிப்பாக ஒருவர் கமெண்டில் கெட்ட வார்த்தை பயன்படுத்தி இருந்தார். இதைப்பார்த்த குஷ்புவுக்கு கோபம் வந்து அந்த நபரை விளாசி விட்டார். பன்னி முதலில் உன் மூஞ்சியை கண்ணாடில பாரே... நாய் கூட பார்க்காது... வாந்தி எடுத்துட்டு போயிடும்... என்றார். இதைத்தொடர்ந்து அந்த நபர் தன் ட்வீட்டை நீக்கிவிட்டார். குஷ்புவின் இந்த ரியாக்ஷனுக்கு நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டு கிடைத்துள்ளது.

குஷ்புவின் மகளை கிண்டல் செய்த நபரின் புகைப்படத்தை திமுக எம்.பி. செந்தில்குமார் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். கேவலமாக கமெண்ட் போட்ட அந்த நபரை பணியமர்த்தியுள்ள நிறுவனம் அவர் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்கும்படி தயவு செய்து அறிவுரை வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த ட்வீட்டை குஷ்பு ரீ-ட்வீட் செய்துள்ளார்.