வைரல் ஆகும் ஃபோட்டோ.! ‘உண்மையில் இரண்டிலும் இருப்பவர் ஒரே பாட்டியா?’.. ‘பலவிதமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!’

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Dec 01, 2020 07:30 PM

டைம்ஸ் பத்திரிகை கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்ட 2020-ல் ஆண்டின் செல்வாக்குமிக்க 100 நபர்களின் பட்டியலில் பில்கிஸ் பானுவும் இடம்பெற்றார். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென டெல்லி சலோ என்கிற போராட்டத்தை பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் முன்னெடுத்துள்ளனர்.

factcheck:shaheen bagh Viral dadi Bilkis Bano in delhi farmersprotest

இந்நிலையில் தற்போதைய விவசாயப் போராட்டத்தில் கலந்துகொண்டதாக ஒரு பாட்டியின் புகைப்படம் சில தினங்களாக வைரலாகிவருகிறது.  அந்த பாட்டியின் புகைப்படங்களைப் பகிருபவர்கள் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான `ஷாஹீன் பாக்' போராட்டத்திலும் இதே பாட்டி கலந்துகொண்டதாகவும், இப்போது பஞ்சாப் விவசாயிபோல கலந்துகொள்வதாகவும், காசு கொடுத்தால் எந்தப் போராட்டத்திலும் கலந்துகொள்வார் என்றும் பகிரப்பட்டுவருகின்றன.

factcheck:shaheen bagh Viral dadi Bilkis Bano in delhi farmersprotest

இதனிடையே நடிகை கங்கனா ரணாவத்தும் இதே கருத்தை பாட்டியின் புகைப்படங்களுடன் சேர்த்து ரீட்வீட் செய்து, பின்னர் அடுத்த நாள் நீக்கிவிட்டதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளனர். உண்மையில் ஷாஹீன் பாக் போராட்டத்தில் பங்கேற்ற அந்த பாட்டியின் பெயர் பில்கிஸ் பானு (Bilkis Bano). 82 வயதான இந்தப் பாட்டி குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ஷாஹீன் பாக்  போராட்டத்தை முன்னின்று நடத்தினார். இதனால் `தாதி ஆஃப் ஷாஹீன் பாக்', அதாவது `ஷாஹீன் பாக்கின் பாட்டி' என்ற பெயர் அவருக்கு கிடைத்தது.

இந்நிலையில் பகிரப்பட்டு வரும் புகைப்படத்தில் இருப்பது பில்கிஸ் பானு அல்ல.  இதுபற்றி பேசிய பில்கிஸ் பானு, “நான் ஷாஹீன் பாக்கில் இருக்கும்  என் வீட்டில் இருக்கிறேன். வைரலாகும் அந்த புகைப்படத்தில் இருப்பது நான் இல்லை. அந்த விவசாயப் போராட்டத்தில் நான் கலந்து கொள்ளவில்லை. எனினும் நானும் இந்த போராட்டத்தில் இணையலாம் என இருக்கிறேன்” என்று  ஆங்கிலச் செய்தி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Factcheck:shaheen bagh Viral dadi Bilkis Bano in delhi farmersprotest | India News.