‘எனக்கு இது ரொம்ப புடிச்சிருக்கு’... ‘திடீரென திருநம்பியாக மாறிய’... ‘பிரபல ஹாலிவுட் நடிகை’... ‘வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்’!!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Dec 02, 2020 01:17 PM

ஜூனோ திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரபல ஹாலிவுட் நடிகை எலன் பேஜ், தன்னை திருநம்பியாக அடையாளப்படுத்தி கொண்டுள்ளார்.

‘JUNO’ STAR ELLEN PAGE COMES OUT AS ELLIOT PAGE

கனடாவைச் சேர்ந்த எலன் பேஜ், ஜூனோ, டி கேப்பிரியோவின் இன்செப்ஷன், டூ ரோம் வித் லவ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு தன்பாலின ஈர்ப்பாளராக அடையாளப்படுத்திக் கொண்ட எலன் பேஜ், எம்மா என்ற பெண்ணை மணந்தார். இதன்பிறகு, தன்பாலின ஈர்ப்பாளர்கள் (LGBTQ) சமூகத்துடன், இணைந்து அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தார்.

இந்நிலையில், தற்போது தாம் திருநம்பியாக மாறிவிட்டதாகவும், எலன் பேஜ் (ELLEN PAGE) என்ற தனது பெயரை எலியட் பேஜ் (ELLIOT PAGE) என்று மாற்றிக்கொண்டுள்ளதாகவும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து விக்கிபீடியா, ஐஎம்டிபி (IMDB), நெட்பிளிக்ஸ் (Netflix) உள்ளிட்ட இணையதளங்களில் அவரது பெயர் மாற்றப்பட்டு வருகிறது. 

‘JUNO’ STAR ELLEN PAGE COMES OUT AS ELLIOT PAGE

இவர் நெட்பிளிக்ஸில் நடித்து வரும் ‘தி அம்ப்ரெல்லா அகாடெமி’ சீரிஸில், தொடர்ந்து பெண்ணாகவே நடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் திரைப்பட நிறுவனமான நெட்பிளிக்ஸ், ‘தங்களது தைரியமான முடிவை பாராட்டுவதாக தெரிவித்து, எங்களது நாயகனை நினைத்து பெருமைப்படுகிறோம்’ என்று ட்வீட் செய்துள்ளது. ஹூயுஜ் ஜாக்மேன் உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்கள் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. ‘JUNO’ STAR ELLEN PAGE COMES OUT AS ELLIOT PAGE | World News.