'அந்த கருத்துக்கள் தேவையற்றது!' - கனடா பிரதமரின் பேச்சுக்கு.. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ரியாக்ஷன்.. வெளியான ‘பரபரப்பு’ அறிக்கை!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் கடந்த 6 தினங்களாக வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சர்வதேச அளவில் விவசாயிகளின் இந்தப் போராட்டம் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் காணொளி மூலம் கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ குருநானக் ஜெயந்தி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டதுடன் டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்தார்.
அதில், “இந்தியாவில்விவசாயிகளின் போராட்டம் பற்றிய செய்திகள் கவலையளிக்க்கிறது. உரிமைகளுக்காக நடக்கும் அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவு கொடுக்கும்” என ஜஸ்டீன் ட்ரூடோ குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் கனடா பிரதமரின் கருத்துக்கு “விவசாயிகள் போராட்டம் குறித்து கனடா பிரதமர் வெளியிட்ட தவறான தகவல்கள் குறித்து அறிந்தோம். ஒரு ஜனநாயக நாட்டின் உள் விவகாரம் பற்றிய இப்படியான கருத்துக்கள் தேவையற்றவை. நியாமான உரையாடல்கள் அரசியல் நோக்கங்களுக்காக திரித்து கூறப்படுதல் கூடாது” என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் மத்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.