ஆடியன்ஸ் இருந்த கேலரியில் நடந்த அதிர்ச்சி.. ஓட்டம் எடுத்த மக்கள்.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில், ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கால்பந்து போட்டிகள் நடத்தப்படுவது என்பது மிகவும் பிரபலமான ஒன்று.

IPL 2022 : வாவ்… செம்ம ஹேண்ட்ஸம் லுக்கில் கிங் கோலி.. RCB வெளியிட்ட வைரல் Pic!
கேரள மக்கள் மத்தியில் கால்பந்து விளையாட்டு மீது அதிக ஆர்வமுள்ளதால், உள்ளூரில் நடைபெறும் போட்டிகளைக் காண வேண்டியும், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வரை மைதானத்தில் கூடுவார்கள்.
அந்த வகையில் கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில், பூங்கோடு என்னும் மைதானத்தில் கால்பந்து போட்டித் தொடர் ஒன்று நடைபெற்று வந்துள்ளது.
பார்வையாளர்கள் கேலரி
இதில், கடந்த சனிக்கிழமை இரவு, கால்பந்து போட்டி ஒன்று நடைபெறுவதாக இருந்தது. இதற்காக, மைதானத்தை சுற்றி ஏராளமான மக்கள் குழுமி இருந்தனர். இதற்கு வேண்டி, கால்பந்து போட்டிகளை கண்டுகளிக்க, தற்காலிக பார்வையாளர்கள் கேலரி ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அன்றைய தினத்தில் கால்பந்து போட்டி தொடங்குவதற்கு முன்பாக அங்கே அமைக்கப்பட்டிருந்த பார்வையாளர்களுக்கான தற்காலிக கேலரி, திடீரென இடிந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து, பெரிய லைட் ஒன்றும் தரையில் விழுந்துள்ளது.
அதிர்ச்சி வீடியோ
இந்த விபத்தில் சுமார் 200 பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது மட்டுமில்லாமல், சுமார் ஐந்து பேர் வரை படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில், கேலரி விழுவதைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் வேகமாக ஓட்டம் எடுத்தனர். மேலும், மைதானத்தின் இன்னொரு பக்கம் இருந்தவர்களும், போலீசாரும் உடனடியாக சென்று அங்குள்ளவரை மீட்பதற்கான முயற்சிகளிலும் இறங்கி இருந்தனர்.
காரணம் என்ன?
காயம் அடைந்த மக்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பனை மரத்தால் செய்யப்பட்ட மர சட்டங்களால் இந்த கேலரி அமைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அளவுக்கு அதிகமான நபர்கள், அங்கே அமர்ந்து இருந்ததால் எடை தாங்காத பட்சத்தில் சரிந்து விழுந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இது தொடர்பாக போலீசார், விழாக்குழுவினரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கால்பந்து போட்டியின் போது, தற்காலிக கேலரி சரிந்து விழுந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
#கேரளா மாநிலம் மலப்புரத்தில் கால்பந்து மைதானத்தின் கேலரி விழுந்ததில் 200க்கும் மேற்பட்டோர் காயம்....#Malappuram pic.twitter.com/7XYIScGbSR
— 🔥என்றும்தமிழன்🔥 (@tamilan_mj) March 21, 2022
"திரும்ப வந்த நடராஜன்.." பந்தில் படு 'ஸ்பீடு'.. அடுத்து நடந்த தரமான சம்பவம்.. வைரலாகும் வீடியோ

மற்ற செய்திகள்
