நடு ரோட்ல கும்ஃபூ.. "அங்க என்ன சத்தம்".. போலீசை கண்டதும் தெறித்து ஓடிய போதை ஆசாமி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்செங்கல்பட்டில் பொது மக்களுக்கு இடையூறு அளித்து வந்த போதை நபர் காவல்துறை அதிகாரிகளை பார்த்ததும் ஓட்டம் எடுத்திருக்கிறார்.
![The Drunken man who disturbed the public ran away when police arrived The Drunken man who disturbed the public ran away when police arrived](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/the-drunken-man-who-disturbed-the-public-ran-away-when-police-arrived.jpg)
"கோவை மக்கள் குசும்பு புடிச்சவங்க".. "பேசுனத வாபஸ் வாங்கிக்கிறேன்.." மேடையில் உதயநிதி கலகலப்பு..!
பொதுவாக குடிமகன்கள் போதை தலைக்கு ஏறியதும், தான் என்ன செய்கிறோம் என்று கூடத் தெரியாமல் பல்வேறு சேட்டைகளில் ஈடுபடுவார்கள். இவர்களை கடந்து போவது என்பதே பலருக்கும் சிரமமான காரியமாக இருக்கும். வாகன ஓட்டிகளின் நிலை இன்னும் மோசம். நடக்கும்போதே பறக்கும் இந்த போதை ஆசாமிகளை சாலையில் பார்த்தால் வாகனத்தின் வேகத்தை குறைத்துவிடுவதே உசிதம். அப்படி, தலைக்கு ஏறிய போதையில் பொது மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த போதை நபர் ஒருவர் காவல்துறை அதிகாரிகளை கண்டதும் தெறித்து ஓடிய சம்பவம் செங்கல்பட்டில் நடந்திருக்கிறது.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்திற்கு அருகே ஒரு போதை ஆசாமி மேல் சட்டை கூட அணியாமல் வலம் வந்திருக்கிறார். பொது மக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் அவர் நடந்து கொண்டதாக தெரிகிறது. பின்னர் அங்கிருந்து சென்ற அந்தக் குடிமகன் செங்கல்பட்டு - திண்டிவனம் நெடுஞ்சாலையில் தனது சேட்டையை காட்டியுள்ளார். அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை வழிமறித்து அவர் தகராறில் ஈடுபட்டு இருக்கிறார்.
நடுரோட்டில் சாகசம்
அதுமட்டுமல்லாமல் சட்டையை கழற்றி தலையில் சுற்றியபடி வலம் வந்த அந்த நபர் நடுரோட்டில் கை, கால்களை மடக்கி சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அங்கிருந்த பொதுமக்கள் அச்சத்துடன் கவனித்து வந்தனர். இந்த நிலையில் செங்கல்பட்டு காவல்துறை அதிகாரிகள் விஷயம் அறிந்து அப்பகுதிக்கு வந்தனர். காவல்துறை அதிகாரிகளை பார்த்ததும் செய்துகொண்டிருந்த சாகசங்களை அப்படியே நிறுத்திவிட்டு அந்த இடத்தில் இருந்து தெறித்து ஓடியிருக்கிறார் போதை ஆசாமி.
செங்கல்பட்டு பகுதியில் பொது மக்களுக்கு இடையூறு அளிக்கும் விதத்தில் ரகளையில் ஈடுபட்டு வந்த போதை நபர் காவல்துறை அதிகாரிகளை பார்த்ததும் தலை தெறித்து ஓடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தண்டவாளத்துல பாறைய வச்சு.. ரயிலயே கவிழ்க்க திட்டம்.. இளைஞர் போட்ட பலே பிளான்..
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)