தண்டவாளத்துல பாறைய வச்சு.. ரயிலயே கவிழ்க்க திட்டம்.. இளைஞர் போட்ட பலே பிளான்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்குருவாயூர் விரைவு ரயிலை கவிழ்க்க, தண்டவாளத்தில் பாறையை வைத்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஐபோன் மோகம்.. தப்பான ரூட்டில் போன முன்னாள் மிஸ்டர் இந்தியா.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்..
தினந்தோறும் நாகர்கோவில் வழியாக சென்னையிலிருந்து குருவாயூருக்கு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காலை சென்னையில் இருந்து புறப்பட்ட குருவாயூர் விரைவு ரயில் இரவு ஒன்பது முப்பது மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்து இரவு பத்து மணிக்கு ரயில் கிளம்பியது. அதன்பிறகு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் - குழித்துறை இடையே பாலோடு பகுதியில் இரவு 10.45 மணிக்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பலத்த சத்தம் எழுந்தது. இதனால், பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
தண்டவாளத்தில் கிடந்த பாறையில் ரயில் மோதியதன் காரணமாகவே இந்த சத்தம் எழுந்திருக்கிறது. ரயில் மோதியதில் கற்கள் சிதறி இருக்கின்றன. அதிர்ஷ்டவசமாக இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து ரயில் ஓட்டுனர் நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.
விசாரணை
இதனையடுத்து ரயில்வே காவல் ஆய்வாளர் கேத்தரின் சுஜாதா, உதவி ஆய்வாளர்கள் குமார ராஜ், பழனியப்பன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
தனிப்படை
கன்னியாகுமரியில் குருவாயூர் விரைவு ரயிலை கவிழ்க்கும் நோக்கத்தோடு தண்டவாளத்தில் பாறைகளை வைத்த நபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை தனிப்படை காவல்துறையினர் ஆய்வு செய்து வந்தனர். அதனடிப்படையில் லெனின் என்ற இளைஞரை காவல்துறை கைது செய்திருக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருவாயூர் விரைவு ரயிலை கவிழ்க்கும் நோக்கோடு, தண்டவாளத்தில் பாறை வைக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, அப்பகுதியில் கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி வருகிறது குமரி மாவட்ட காவல்துறை.
"கோவை மக்கள் குசும்பு புடிச்சவங்க".. "பேசுனத வாபஸ் வாங்கிக்கிறேன்.." மேடையில் உதயநிதி கலகலப்பு..!