‘அச்சுறுத்தும் எண்ணிக்கை’!.. கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிக்க ‘காரணம்’ இதுதான்.. மத்திய நிபுணர் குழு அறிக்கை..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான காரணம் குறித்து மத்திய நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்தியாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கொரோனா பரவல், படிப்படியாக கட்டுக்குள் வர ஆரம்பித்துள்ளது. பல மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அம்மாநிலத்தில் நாளொன்றுக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமாக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் நோய் தொற்றைக் கட்டுப்படுத்த கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்று (05.08.2021) முதல் நாள்தோறும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேரளாவில் கொரோனா பரவல் குறித்த நிலவரத்தை ஆய்வு செய்ய தேசிய நோய் தடுப்பு மைய இயக்குநர் சுஜீத் சிங் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அனுப்பியது. இந்த குழு அங்கு இரு பிரிவாக பிரிந்து விரிவான ஆய்வுகளை நடத்தி மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது.
அதில், ‘கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவதிலும், நோய் தொற்று பரிசோதனைகளை செய்வதிலும் கேரள அரசு மந்தமாக இருக்கிறது’ என குறிப்பிட்டுள்ளது. மேலும் மக்களும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றமால் அலட்சியம் காட்டுவதாகவும் மத்திய நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
