இனி மது வாங்க வருபவர்களுக்கும் கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம்.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மாநிலம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இந்த சூழலில் கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாநிலத்தில் நாள் ஒன்றுக்கான தொற்று எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்து செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அங்கு காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கேரளாவில் மதுக்கடையில் மது வாங்க வருபவர்கள் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஓணம் பண்டிகை வருவதை முன்னிட்டு, மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த கட்டுப்பாடுகள் தற்காலிகமானவைதான் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
