'1200 கி.மீ அப்பாவை சைக்கிளில் கூட்டிக்கொண்டு போன...' 'சிறுமிக்கு அடித்த ஜாக்பாட்...' எப்படி இவ்ளோ தூரம் ஓட்ட முடியும்னு ஆச்சரியமா இருந்துச்சு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதந்தையை சைக்கிளில் ஏற்றி 1200 கி.மீ பயணித்த சிறுமி ஜோதிக்கு சில தேர்வுகளுக்கு பின் தேசிய சைக்கிளிங் பெடரேசனில் பயிற்சியாளராக மாறும் தகுதி உள்ளதா என்ற சோதனை நடத்த உள்ளதாக வெளிவந்த தகவல் பலரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக பல வெளிமாநில தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரம் இழந்து சொந்த ஊருக்கு நடைப்பயணமாகவும், லாரிகளில் புலம்பெயர்ந்து செல்வதை பார்த்தோம்.
இவர்களை போல 8 வகுப்பு படிக்கும் பீகாரை சேர்ந்த 15 வயதான ஜோதி குமாரி என்னும் சிறுமி, தனது தந்தை மோகன் பஸ்வானுடன் அரியானா மாநிலம் குர்கானில் (குருகிராம்) வசித்து வந்தார். ஆட்டோ டிரைவரான மோகனுக்கு ஊரடங்கு காலத்தில் ஒரு விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார். வாழ்வாதாரத்தையும் இழந்து, மருத்துவ செலவுக்கு கையில் பண இருப்பு இல்லாமல் தவித்த தந்தையும் மகளும் சொந்த ஊரான பீகாருக்கு செல்ல முடிவெடுத்தனர்.
கையில் இருந்த பணத்தை வைத்து ஒரு சைக்கிள் வாங்கி, உடல்நிலை சரி இல்லாத தந்தையை சுமார், 1,200 கி.மீ. தொலைவில் இருக்கும் பீகாரில் உள்ள சொந்த கிராமத்துக்கு அழைத்து சென்றார் ஜோதி குமாரி.
கடந்த 10-ந்தேதி குர்கானில் சைக்கிள் பயணத்தை தொடங்கிய ஜோதி குமாரி 7 நாட்கள் இரவும், பகலும் தொடர் சவாரிக்கு பின்னர் கடந்த 16-ந் தேதி பீகாரில் உள்ள சொந்த கிராமத்துக்கு தந்தையுடன் சென்றடைந்தார்.
இந்த சம்பவத்தை அறிந்த டெல்லியில் இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் அமைந்துள்ள உள்ள தேசிய சைக்கிளிங் பெடரேசன் அறிந்து அதிர்ந்துபோனது. மேலும் ஒரு சிறுமி தன்னை விட அதிகம் எடையுள்ள தந்தையை ஏற்றிக்கொண்டு இவ்வளவு நாள், இவ்வளவு தொலைவை கடக்க ஒரு சிறுமிக்கு இது சாத்தியமாயிற்று என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.
இதனால் இந்திய விளையாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் இந்த அமைப்பு சிறுமி ஜோதிகுமாரியை அழைத்து அவரது சைக்கிள் ஓட்டும் திறனை சோதித்துப்பார்ப்பது என்று முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் பற்றி கூறிய அந்த அமைப்பின் தலைவர் ஓங்கர் சிங், 1,200 கி.மீ. தொலைவுக்கு சைக்கிள் ஓட்டுவது என்பது சாதாரணமானது அல்ல. அதற்கு மிகுந்த வலிமையும், உடல்வாகு இருக்க வேண்டும். ஜோதி குமாரி சிறுமியை எங்களிடம் உள்ள கணினிமயமாக்கப்பட்ட சைக்கிளில் அமர வைத்து சோதிப்போம். நாங்கள் தேர்ந்தெடுக்கும் 7 அல்லது 8 அம்சங்களில் அவர் தேர்ச்சி பெறுகிறாரா என்று பார்ப்போம். தேர்ச்சி பெற்று விட்டால், ஜோதிகுமாரி பயிற்சியாளர்களில் ஒருவராக இருக்க முடியும். ஏற்கனவே எங்களிடம் 14, 15 வயதில் 10 வீரர்கள் இருக்கிறார்கள். இளம் வீரர்களை நாங்கள் வளர்த்தெடுக்க விரும்புகிறோம்.
இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி அனைவரையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒரு சிலர் ஜோதி குமாரிக்காக பிராத்திக்கவும் தொடங்கிவிட்டனர் எனலாம்.