‘கூலித் தொழிலாளியின் வயிற்றில் இருந்ததைப் பார்த்து’... ‘அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Aug 06, 2019 11:44 AM

கேரளாவில் கூலித் தொழிலாளி வயிற்றில் இருந்த 111 இரும்பு ஆணிகளை, கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

111 nails taken out of patient stomach in Thrissur

திருச்சூர் மேத்தாலா ஊரைச் சேர்ந்தவர் 49 வயது மதிக்கத்தக்க கூலித் தொழிலாளி. இவருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டதால், அவரது உறவினர்கள் அவரை திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது, அந்த நோயாளியின் வயிற்றில் ஆணிகள் இருப்பது தெரியவந்தது. மேலும் வயிற்றுப் பகுதியின் வெவ்வேறு இடங்களில் அந்த ஆணிகள் காணப்பட்டதால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். கூலித் தொழிலாளியான அவருக்கு, வயிற்றுவலி அதிகமாக இருந்ததால், உடனடியாக ஆபரே‌ஷன் செய்யவும் மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், அவருக்கு ஆபரே‌ஷன் செய்யப்பட்டது. அவரது வயிற்றில் இருந்து 111 ஆணிகளை மருத்துவர்கள் நீண்ட நேரம் போராடி அகற்றினார்கள். மனநலம் பாதிக்கப்பட்டநிலையில் சிகிச்சை பெற்று வரும் அவர், கடந்த 10 வருடங்களாக சாலை ஓரங்களில் கிடக்கும் இரும்பு ஆணிகளை உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். சாதாரண வயிற்று வலி என நினைத்து, பல்வேறு மருத்துவர்கள் மருந்து மட்டுமே கொடுத்து வந்துள்ளனர். ஆனால், நாளக நாளக வயிற்றுவலி அதிகரிக்கவே, ஸ்கேனில் அவரது வயிற்றில் இரும்பு ஆணிகள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளது. 

Tags : #NAILS #PINS #KERALA #THRISSUR