வயிற்றுக்குள் எப்படி 187 நாணயங்கள்..? X RAY-வில் தெரியவந்த உண்மை.. ஆச்சரியத்தில் உறைந்த மருத்துவர்கள்.!
முகப்பு > செய்திகள் > இந்தியாகார்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள சந்தே கெல்லூரு கிராமத்தை சேர்ந்தவர் திம்மப்பா ஹரிஜன். இவருக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும், 60 வயதாகும் ஹரிஜன் மது பழக்கம் உடையவர் என கூறப்படுகிறது. அதே வேளையில், சமீபத்தில் மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அப்படி ஒரு சூழலில், திடீரென திம்மப்பா ஹரிஜனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. கடுமையான வயிற்று வலியின் காரணமாக துடித்த திம்மப்பா ஹரிஜனை அவரது குடும்பத்தினர் மருத்துவமனையிலும் சேர்த்துள்ளனர். அப்போது, எக்ஸ் ரே எடுத்து பார்த்த போது மருத்துவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
திம்மப்பா வயிற்றல் ஏராளமான நாணயங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சை மேற்கொண்டு வயிற்றில் இருக்கும் நாணயங்களை அகற்றவும் மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, சமீபத்தில் ஹரிஜனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவரது வயிற்றில் இருந்து சுமார் 1.2 கிலோ எடைக்கு இருந்த சுமார் 187 நாணயங்களையும் மருத்துவர்கள் அகற்றி உள்ளனர்.
மேலும், ஹரிஜனின் வயிற்றில் 56 ஐந்து ரூபாய் நாணயங்களும், 51 இரண்டு ரூபாய் நாணயங்களும், 80 ஒரு ரூபாய் நாணயங்களும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல, உரிய நேரத்தில் அவற்றை அகற்றியதால் திம்மப்பா ஹரிஜன் உயிர் பிழைத்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மனநலம் பாதிக்கப்பட்டிருந்த சமயத்தில், நாணயங்களை திம்மப்பா ஹரிஜன் விழுங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மற்ற செய்திகள்
