WIMBLEDON : 'ஆல் ஒயிட்' உடைக்கு இனி இல்லை தடா..! இனி அடர்நிற அண்டர் ஷார்ட்ஸை வீராங்கனைகள் அணியலாம்.! விம்பிள்டன் அதிரடி.

முகப்பு > செய்திகள் > இந்தியா

By K Sivasankar | Nov 18, 2022 02:47 PM

லண்டன்: டென்னிஸ் வீராங்கனைகளுக்கு இருந்த அண்டர் ஷார்ட்ஸ் ஆடை நிற கட்டுப்பாடுகளை தளர்த்தி, இனி பல்வேறு வண்ணங்களிலும் அணியலாம் என விம்பிள்டன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Wimbledon relaxes All White clothing rule for women

Also Read | "சாரா கூட டேட்டிங்கா?".. முதல் முறையா கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் சொன்ன பதில்.. வைரல் பின்னணி!!

1877-ம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வரும் உலகின் பழமையான கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் உலக அளவில் மிக பிரபலம். தொடக்கத்தில் ஆண்களுக்கான பிரிவில் நடந்த இந்த போட்டிகள் 1884 முதல் பெண்கள் பிரிவிலும் நடத்தப்பட தொடங்கின. புல்தரையில் நடக்கும் ஒரே கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியான இந்த போட்டிகளில், மைதானத்தில் 8 மில்லிமீட்டர் உயரத்துக்கு புற்கள் இருக்கும்.

இதில் வீராங்கனைகள் ஆடைகளுக்கு கட்டுப்பாடு இருந்துவந்தது. அதாவது மற்ற டென்னிஸ் போட்டிகளில் வீரர்களும் வீராங்கனைகளும் எந்த நிறத்தில் வேண்டுமானாலும் ஆடைகள் அணியலாம் என்கிற முறைமை உள்ளது. ஆனால் விம்பிள்டன் போட்டிகளில் மட்டும் வெள்ளை நிறத்தில்தான் ஆடை அணிய வேண்டும் என்கிற ரூல்ஸ் இருந்து வந்தது. ஆனால் இந்த விதிகளால் மாதவிடாய் காலத்தில் விளையாடும் வீராங்கணைகள் மன உளைச்சலுக்கு ஆளாவதாக நீண்ட வருடங்களாகவே கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில்தான், விம்பிள்டன் போட்டியை நடத்தி வரும் ஆல் இங்கிலாந்து கிளப் இந்த ஆடைக் கட்டுப்பாட்டை தளர்த்தி, வீராங்கனைகள் இனி, அடர் நிற அண்டர் ஷார்ட்ஸ் அணியலாம் என்றும், அவர்களுக்கு இதுவரை இருந்த ஆல் ஒயிட் ஆடைக் கட்டுப்பாடு விலக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மான்செஸ்டர் சிட்டி கால்பந்து மகளிர் அணி இதே மாதிரி ஆடைக் கட்டுப்பாட்டை தளர்த்தி, மகளிர் அணியினர் இனி வெள்ளை நிற அண்டர் ஷார்ட்ஸ் அணிய வேண்டியதில்லை என தெரிவித்தனர்.

இந்நிலையில்தான் விம்பிள்டன் இவ்வாறு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு குறித்து, விம்பிள்டன் தலைமை செயல் அதிகாரி சாலி போல்டன் பேசும்போது, "வீராங்கனைகள் களத்தில் தங்களுடைய ஆட்டத் திறமையை சிறப்பான முறையில் வெளிப்படுத்துவதற்கு அவர்களின் தேவை என்னவோ அதை செய்யவே நாங்கள் தயாராக இருக்கிறோம். அவர்களின் ஒருமித்த இந்த குரல்களுக்கு ரெஸ்பாண்ட் பண்ணுகிறோம்.

அதன்படி வீரர்கள், விம்பிள்டன் போட்டி பங்குதாரர்கள், நிர்வாகக் குழு என அனைவரும் இந்த ஆடை விசயத்தில் ஒருமித்த கருத்தை அடைந்ததை அடுத்து இந்த ஆடை கட்டுப்பாட்டை தளர்த்தியிருக்கிறோம்.  இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, வரும் ஆண்டு முதல் விம்பிள்டன் போட்டியில் விளையாட கூடிய வீராங்கனைகள், அவர்கள் விருப்ப பட்டால், வெள்ளை நிற அண்டர் ஷார்ட்ஸ் தவிர்த்து பல வண்ணங்களிலும் அண்டர்ஷார்ட்ஸ் அணிந்து ஆடலாம். இந்த விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது, வீராங்கனைகள் தங்களது ஆட்டத்தில் கூடுதல் கவனத்தை செலுத்தி திறமையை வெளிப்படுத்துவதற்கு உதவும் என நம்புகிறோம்." என்று தெரிவித்துள்ளார்.

Also Read | Sivan Kutty : “பாடி ஷேமிங் ஒரு கேவலமான செயல்!..”.. பள்ளி பாடத்தில் விழிப்புணர்வை கொண்டுவரும் கேரள அரசு? கவனம் பெற்ற அமைச்சரின் கருத்து.!

Tags : #KERALA #SIVAN KUTTY #BODY SHAMING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Wimbledon relaxes All White clothing rule for women | India News.