LAKSHMI VASUDEVAN : “ரூ.5 லட்சம் பரிசு..”.. தவறான லிங்க்.. டவுன்லோடு ஆன ஆப்.. என்ன செய்யக்கூடாது.? பாதிக்கப்பட்ட சீரியல் நடிகை எச்சரிக்கை..
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தி ஆன்லைன் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிரபல சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவன் தனக்கு நடந்த சைபர் குற்றம் தொடர்பான உருக்கமான தகவல்களை விழிப்புணர்வுக்காக பகிர்ந்துள்ளார்.
Also Read | TVS வேணு சீனிவாசன் அவர்களின் தாயார் திருமதி.பிரேமா சீனிவாசன் காலமானார்..!
அதில், “அனைவருக்கும் வணக்கம். என்னுடைய மொபைல் எண்ணுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வென்றதாக ஒரு மெசேஜ் வந்தது. நான் அதை கிளிக் செய்துவிட்டேன். இதனை அடுத்து ஒரு ஆப் டவுன்லோடு ஆகி, அதனால், என் போன் ஹேக் ஆகியுள்ளது. அது எனக்கு 3 நாள் கழித்துதான் தெரியும். ஆனால் இதனை தொடர்ந்து ஆபாசமாக வாய்ஸ் நோட் அனுப்பி பணம் கேட்டு மிரட்னார்கள். பணம் தரவில்லை என்றால் என் போனில் உள்ள வாட்ஸ் ஆப் காண்டாக்டில் இருக்கும் பலருக்கும் என் மார்ஃப் செய்யப்பட்ட புகைப்படங்கள் அனுப்புவதாக கூறியுள்ளார்கள். கூறியபடியே அப்படி செய்துமிருக்கிறார்கள்.
ஆம், என்னைப் பற்றிய தவறான போட்டோகிராப் மார்ஃப் செய்யப்பட்டு வேறொரு புது நம்பரில் இருந்து என்னுடைய வாட்ஸ் அப் காண்டக்ட் அனைவருக்கும் புகைப்படங்கள் அனுப்பப்பட்டிருக்கிறது. (அழுகிறார்) என்னுடைய நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்கள் உட்பட அனைவருக்கும் அந்த புகைப்படங்கள் சென்றிருக்கின்றன. என் பற்றி என்னுடைய நண்பர்கள் அனைவருக்கும் தெரியும். நான் யாரையும் சொல்ல விரும்பவில்லை. தயவு செய்து இப்படியான மெசேஜ்கள் வந்தால் அதை கிளிக் செய்து அவற்றை டவுன்லோட் செய்யாதீர்கள்.. இது அனைவருக்கும் தெரிய வேண்டும், இதனால் பல விளைவுகள் உருவாகும். பலரும் இதனால் தற்கொலை செய்து கொள்கிறார்கள், எத்தனை தைரியமான பெண்ணாக இருந்தால் இப்படியான சூழ்நிலையை சந்திக்கும்போது ஒருநொடி உடைந்துவிடுவார்கள்.
நான் இதுபற்றி ஹைதராபாத் சைபர் க்ரைமில் புகார் அளித்துள்ளேன். ஆனால் நான் செய்த தவறை வேறு யாரும் செய்யக்கூடாது என்பதற்காக இதை பகிர்கிறேன். தயவுசெய்து யாரும் இதுபோன்ற மெசேஜ்களை கிளிக் செய்ய வேண்டாம், தவறான வாட்ஸ் ஆப் நம்பர்களில் இருந்து அப்படியான மெசேஜ்கள் வந்தால் அதை பிளாக் செய்வதைவிட ரிப்போர்ட் செய்துவிடுங்கள். பிளாக் செய்தால் உங்களுக்கு பிளாக் ஆகிவிடும். ஆனால் ரிப்போர்ட் செய்தால் தான், உங்கள் காண்டாக்டில் இருக்கும் யாருக்கும் அப்படியான மெசேஜ்களை அவர்களால் அனுப்ப இயலாது.
ஏனென்றால், இந்த நம்பர்கள் எதுவும் இந்தியா நம்பர்கள் கிடையாது. இவற்றின் ஐபி அட்ரஸ் மாறிக்கொண்டே இருக்கும். எல்லாம் வெளிநாட்டு இடங்களிலும் இந்த நம்பர்கள் ஜம்ப் ஆகிக்கொண்டே இருக்கும். இதை சைபர் கிரைம் ஆய்வு செய்து வருகின்றனர். நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், அனைவரின் உறுதுணையும் வேண்டும், நன்றி!” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Also Read | "அட, இது தான்'ங்க அந்த உற்சாக Announcement".. தோனி உடைத்த சீக்ரெட்.. "தல சொன்னது நிஜமா நடந்துருமா??"