'பிராட்பேண்ட்.. லேண்ட்லைன்.. கேபிள்'.. 3 சர்வீசும் 600 ரூபாயில்.. ஜியோ அதிரடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Apr 24, 2019 07:35 PM

இன்றைய தேதியில் இணையம் இல்லாததுதான் மிகப் பெரிய வறுமை.

jio gives 100 GB data with 100 mbps service offer in 600 rupees

கேபிள் டிவியைப் பொறுத்தவரை ட்ராய் கழகத்தின் புதிய மாற்றங்கள்படி மாதம் ஒன்றுக்கு 300 லிருந்து 500 ரூபாய் வரையும்,  இணையதளத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. அதிவேகத்துடன் கூடிய இணையம் வேண்டும் என்றால் அதற்காக 1000 ரூபாய் செலவிட வேண்டியுள்ளது.

தவிர 1,500 ரூபாய் வரை செலவு செய்ய தயாராக இருந்தால், பிராட்பேண்ட், லேண்ட்லைனுடன் கூடிய இணைய தளத்தையெல்லாம் பெற முடியும். ஆனால் இவை அனைத்தையும் 600 ரூபாயில் தருவதாக  ஜியோ கூறியுள்ள மிகப்பெரிய அறிவிப்பு தமிழ் நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இன்னும் சந்தைக்கு வராத ஜியோவின் இந்த ஜியோஃபர் என்று சொல்லக்கூடிய மெகா ஆஃபர் சோதனைகளின் அடிப்படையில் சில இடங்களில் கிடைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பலரும் முதல் வைப்பு நிதியாக ரூபாய் 4,500-ஐ கட்டிவிட்டு இந்த சேவையை தற்போதைக்கு தற்காலிகமாக இலவசமாக பயன்படுத்தி வருகின்றனர்.

எனினும் அடுத்த ஆண்டு முதல் சந்தைக்கு வரக்கூடிய இந்த ஆஃபர் வந்துவிட்டால்,  100 எம்பிபிஎஸ் வேகத்தில் 100 ஜிபி வரையிலான   டேட்டாவை மாதம் வெறும் 600 ரூபாய் செலவில் பெற்றுக்கொள்ளலாம் என்றும், இதன் மூலம் அன்லிமிட்டடு வாய்ஸ் கால்கள், தினமும் 600 டிவி சேனல்கள் முதலானவற்றை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் தெரிகிறது.

Tags : #JIO #NET #OFFER