ஸ்கூலில் நடந்த திருட்டு.. "அங்க இருந்து கெளம்புறதுக்கு முன்னாடி.." BLACK BOARD-ல் திருடர்கள் எழுதிய விஷயம்.. செம வைரல்
முகப்பு > செய்திகள் > இந்தியாஒடிஷாவில் பள்ளி ஒன்றில் இருந்து திருடர்கள் பொருட்களை திருடி சென்ற பிறகு, அங்கிருந்த கரும் பலகையில் எழுதி வைத்து விட்டுச் சென்ற விஷயம் தான், இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஒடிஷா மாநிலம், நபரங்பூர் என்னும் மாவட்டத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தான், சமீபத்தில் கொள்ளை ஒன்று அரங்கேறி உள்ளது.
இது தொடர்பாக வெளியான தகவலின் படி, பள்ளிக்குள் நுழைந்த திருட்டுக் கும்பல் ஒன்று, அங்கிருந்த தலைமை ஆசிரியரின் அறையை உடைத்து உள்ளே சென்றுள்ளது.
தூம் 4 - முடிஞ்சா பிடிங்க..
தொடர்ந்து, அங்கிருந்த கணினிகள், பிரின்டர்கள் உள்ளிட்ட பல பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். பொருட்களை திருடி சென்றதுடன் மட்டும் நிறுத்தி விடாமல், அங்கிருந்த Black Board ஒன்றில், "Dhoom 4. நாங்கள் விரைவில் திரும்புவோம்" என்றும் குறிப்பிட்டுள்ளனர். பாலிவுட்டில் இதுவரை தூம் திரைப்படத்தின் 3 பாகங்கள் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தின் கதைக் களம் என்பது திருடர்கள் மற்றும் போலீசாருக்கு இடையே நடப்பது போன்று அமைந்திருக்கும்.
அந்த வகையில், 'தூம் 4' ஆரம்பம் போல திருடர்கள் இதனை கருதிக் கொண்டு, பலகையில் அப்படி எழுதி உள்ளனர். அது மட்டுமில்லாமல், "முடிந்தால் எங்களை பிடியுங்கள்" என போலீசாருக்கு சவால் விடும் வகையிலும் திருடர்கள் எழுதி விட்டுச் சென்றுள்ளனர். இத்துடன், போலீசாரை தவறான பாதையில் மாற்றுவதற்காக சில மொபைல் நம்பர்களையும் அதனுடன் திருடர்கள் எழுதிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
உடைந்து கிடந்த கதவு
தொடர்ந்து, இந்த திருட்டு நடந்த பின்னர், மறுநாள் பள்ளியை திறக்க வந்த பியூன், தலைமை ஆசிரியரின் அறையின் கதவு உடைக்கப்பட்டு, பொருட்கள் திருட்டு போனதை அறிந்து அதிர்ந்து போனார். உடனடியாக, பள்ளி நிர்வாகத்தினரிடம் தகவலை தெரிவிக்க, அதன் தலைமை ஆசிரியர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார், பள்ளி வளாகத்திற்குள் ஏதேனும் ஆதாரங்கள் சிக்குகிறதா என்பதை சோதனை செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
