43 வருசத்துல 53 பொண்ணுங்க கூட கல்யாணம்.. "யாரு கூடயும் வாழ்ந்தது செட் ஆகலையாம்".. 63 வயசில் கடைசியாக எடுத்த முடிவு!!
முகப்பு > செய்திகள் > உலகம்63 வயதாகும் நபர் ஒருவர், மொத்தம் 53 பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளது தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
![63 year old man married for 53 times in 43 years 63 year old man married for 53 times in 43 years](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/63-year-old-man-married-for-53-times-in-43-years.jpg)
Also Read | "என்னோட கடைசி தொடர்".. ஓய்வு முடிவை எடுத்த பெடரர்.. மனதை உருக வைக்கும் அறிக்கை.. வேதனையில் ரசிகர்கள்
சவுதி அரேபியாவை சேர்ந்தவர் அபு அப்துல்லா. இவருக்கு தற்போது 63 வயதாகிறது. இந்நிலையில், தனக்கு திருமணமான எண்ணிக்கை மற்றும் மனைவிகள் தொடர்பாக சமீபத்தில் அபு அப்துல்லா பேசியது தொடர்பான வீடியோக்கள், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
அபு பேசியுள்ள தகவலின் படி, அவரது 20 ஆவது வயதில் தன்னை விட ஆறு வயது மூத்த பெண்ணை முதலாவதாக திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. அந்த சமயத்தில் ஒன்றுக்கு மேல் திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே இருந்ததில்லை என்று அபு குறிப்பிட்டிருந்தார். ஆனால், சில மாதங்கள் கழித்துமே முதல் மனைவியுடன் அபு அப்துல்லாவுக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், இரண்டாவது திருமணம் செய்யும் எண்ணம் அபுவுக்கு வரவே அதனை தனது மனைவியிடமும் அவர் கூறி உள்ளார். இரண்டாவது திருமணமும் அப்துல்லா செய்து கொள்ள, முதல் மற்றும் இரண்டாவது மனைவிக்கு இடையே தகராறு உருவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இப்படியே மூன்று, நான்கு என அடுத்தடுத்து பெண்களை திருமணம் செய்து கொண்டும் விவாகரத்து செய்து கொண்டும் அபு அப்துல்லா வந்ததாக கூறப்படுகிறது. தன்னுடைய மன ரீதியான நிம்மதிக்காகவே இவை நடந்ததாகவும் அபு குறிப்பிடுகிறார்.
மேலும் அவர் செய்த திருமணங்களிலேயே குறைந்த காலம் நீடித்தது என்றால், ஒரு நாளுடன் ஒரு திருமண வாழ்க்கை நின்று போனது என்பது தான். இதற்கு மத்தியில், தொழில் விஷயமாக வெளிநாடு சென்றிருந்த அபு அப்துல்லா, ஒரு வெளிநாட்டு பெண்ணையே காதலித்து அங்கேயே திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இத்தனை மனைவிகளுக்கு பின், தற்போது ஒரே ஒரு மனைவியுடன் வாழ்ந்து வரும் அபு அப்துல்லா, இனிமேல் திருமணம் செய்து கொள்ளும் எண்ணமில்லை என கூறி விட்டதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றது.
43 வருடங்களில் 53 பெண்களை திருமணம் செய்து கொண்டது தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் அதிகம் பரபரப்பை கிளப்பி உள்ள நிலையில், பலரும் இது தொடர்பாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)