காராபூந்தியில் மது கலந்து ‘காக்கா வேட்டை’.. ‘காடை பிரியாணி’க்கு காகங்கள் வேட்டையா?.. பீதியை கிளப்பிய தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஹோட்டல்களில் காடை பிரியாணிக்காக காகங்கள் வேட்டையாடப்படுவதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ்கோடி பகுதியில் உள்ள சவுக்கு மரக்காடுகள் நிறைந்த பகுதிகளில் மர்மநபர்கள் ஹோட்டல்கள் மற்றும் சாலையோரக் கடைகளில் ‘காடை பிரியாணி’ என விற்பனை செய்வதற்காக காகங்களை வேட்டையாடி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக ராமேஸ்வரம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு வேட்டையாடுவதாக சொல்லப்படுகிறது.
ஒரே நேரத்தில் வலை விரித்து அதிக அளவிலான காக்கைகளை பிடித்தால் வெளியாட்களுக்குத் தெரிந்துவிடுமென எண்ணி, மது கலந்த காராபூந்திகளை காக்கைகள் சாப்பிட கொடுத்துள்ளனர். இதனால் சிறிது நேரத்தில் காக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழுந்துள்ளன. அப்போது அவற்றின் மீது சாக்குப்பைகளை போட்டு மூடி முழுமையாக மயங்கும் வரை காத்திருந்து, பின்னர் அவற்றை சேகரித்து ஹோட்டல் மற்றும் சாலையோர உணவு கடைகளுக்கு கொடுப்பதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சென்ற வனத்துறையினர் இதுதொடர்பாக இரண்டு நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
News Credits: Vikatan
