உக்ரைனில் உயிரிழந்த மருத்துவ மாணவர்.. கடைசியா அப்பா கிட்ட வீடியோ கால்ல பேசியிருக்காரு.. நெஞ்சை ரணமாக்கும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவர் கடைசியாக தந்தையிடம் வீடியோ காலில் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24-ம் தேதி போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல்வேறு பகுதிகளில் இரு நாடுகளுக்கு இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. அதில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ் நகரில் குடியிருப்புப் பகுதிகள் மீது ரஷ்ய விமானப்படை தொடர்ந்து குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலையில் இந்த நகரம் இருப்பதால், ரஷ்ய ராணுவம் இங்கு அதிகமாக தாக்குதல் நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. அதனால் இங்கு உள்ள இந்திய மாணவர்கள் உடனே பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருந்தது.
இந்த நிலையில், இன்று (01.03.2022) காலை கார்கிவ் பகுதியில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் கர்நாடக மாநிலம் ஹவேரி சாலகிரியை சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பா என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த மாணவர் நவீனின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். இந்த நிலையில், உயிரிழப்பதற்கு இரு தினங்களுக்கு முன்பு, கடைசியாக அவரது அப்பாவிடம் வீடியோ காலில் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி காண்போரை கலங்க வைத்துள்ளது.