26 வயசுல மரணம்.. மைக்ரோசாஃப்ட் சிஇஓ-வின் மகன் பற்றி வெளியான உருக்கமான தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Mar 01, 2022 05:36 PM

மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளாவின் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Microsoft CEO Satya Nadella son died, Know about his health condition

அவரை தான் கல்யாணம் பண்ணிப்பேன்.. பிடிவாதமாக நின்ற பட்டதாரி பெண்.. பெற்ற மகள் என்றும் பாராமல் கோபத்தில் அப்பா செய்த கொடூரம்..!

மைக்ரோசாஃப்ட்

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் சத்ய நாதெள்ளா. இவர் கடந்த 2014-ம் ஆண்டு உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்டில் தலைமை செயல் அதிகாரியாக (CEO) பணி உயர்வு செய்யப்பட்டார். உலக கோடீஸ்வரர் பில்கேட்ஸின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு சத்ய நாதெள்ளா சிஇஓவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சத்யா நாதெள்ளா

கூகுள் நிறுவனத்தில் சிஇஓவாக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை இருந்து வருகிறார். இதற்கு பிறகு உலகின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாஃப்ட்டுக்கு  இந்தியர் ஒருவர் தேர்வானது பெரிதும் பேசப்பட்டது.

Microsoft CEO Satya Nadella son died, Know about his health condition

ஜைன் நாதெள்ளா

சத்யா நாதெள்ளாவிற்கு ஜைன் நாதெள்ளா என்ற மகனும் (வயது 26), திவ்யா நாதெள்ளா மற்றும் தாரா நாதெள்ளா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மகன் ஜைன் நாதெள்ளா பிறவியிலேயே தசை இயக்கம், தசைநார் பெருமூளை வாதம் ஆகிய குறைகளுடன் பிறந்தார் என சொல்லப்படுகிறது. இதற்காக கடந்த சில ஆண்டுகளாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜைன் நாதெள்ளா உயிரிழந்தார்.

இரங்கல்

ஜைன் நாதெள்ளா மறைவு குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு இமெயில் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ‘நமது சிஇஓ சத்யா நாதெள்ளா மகன் ஜைன் நாதெள்ளாவின் மறைவால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளோம். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யுங்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியில் நடந்த பயங்கரம்.. உக்ரைனில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்.. அதிர்ச்சி தகவல்..!

Tags : #MICROSOFT #MICROSOFT CEO #MICROSOFT CEO SATYA NADELLA #SATYA NADELLA SON DIED #HEALTH CONDITION #ZAIN NADELLA PASSED AWAY #மைக்ரோசாஃப்ட் சிஇஓ #சத்யா நாதெள்ளா #ஜைன் நாதெள்ளா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Microsoft CEO Satya Nadella son died, Know about his health condition | India News.