"500 டன் வெயிட்டு.. இந்தியா மேல விழுந்தா என்ன பண்ணுவீங்க..?" தூக்கிவாரிப் போட வைக்கும் ரஷ்யாவின் பரபரப்பு கேள்வி..!
முகப்பு > செய்திகள் > உலகம்வரலாற்றின் மிக மோசமான நாட்களை உக்ரைன் சந்தித்து வருகிறது. நேட்டோவில் அங்கம் வகிக்க, உக்ரைன் விருப்பம் தெரிவிக்க இதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதனிடையே, கடந்த வியாழன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீது போரை அறிவிக்க, சுமார் ஒன்றரை லட்சம் ரஷ்ய வீரர்கள் உக்ரைனில் போரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில்,ரஷ்யாவின் போக்கை கண்டித்து அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. ரஷ்யாவிற்கு சொந்தமான வங்கிகளை முடக்குவது எனத் துவங்கி ரஷ்யாவின் விண்வெளி நிறுவனங்களின் மீதும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், சர்வதேச விண்வெளி ஆய்வுமையம் இந்தியா அல்லது சீனாவின் நிலப்பரப்பில் விழுந்தால் என்ன செய்வீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளது ரஷ்யா.
இதுகுறித்து ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் ரோஸ்கோஸ்மஸ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்,"ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ISS) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எங்களுடைய ஒத்துழைப்பை மறுத்தால் சர்வதேச விண்வெளி மையம் அமெரிக்கா அல்லது ஐரோப்பா மீது விழாமல் யார் பாதுகாப்பார்கள்? அதுமட்டுமல்லாமல் 500 டன் எடையுள்ள விண்வெளி மையம் இந்தியா அல்லது சீனா மீது விழவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த வாய்ப்பின் மூலம் அவர்களை அச்சுறுத்த விரும்புகிறீர்களா? சர்வதேச விண்வெளி ஆய்வுமையம் ரஷ்யா மீது பறக்கவில்லை. ஆகவே உங்களுக்குத்தான் ரிஸ்க் அதிகம். அதை நீங்கள் சந்திக்க தயாரா?" எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்
சர்வதேச விமான நிலையம் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், கனடா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் கூட்டு முயற்சியால் இயங்கி வருகின்றது. தற்போதைய நிலையில் விண்வெளி மையத்தில் 4 அமெரிக்க வீரர்களும் 2 ரஷ்ய வீரர்களும் ஒரு ஐரோப்பிய வீரரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் போட்ட ட்வீட் வைரலாகி வருகிறது.
ஐநாவில் அமெரிக்கா தீர்மானம்
நேற்று ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கூட்டத்தில் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா அல்பேனியா தீர்மானத்தை கொண்டுவந்தன. இதனை தனது வீட்டோ பவரை பயன்படுத்தி ரஷ்யா முறியடித்தது. அந்நாட்டிற்கு எதிராக 11 நாடுகள் வாக்கு அளித்த நிலையில் ரஷ்யாவின் முடிவால் தீர்மானம் நிறைவேறாமல் போனது. இந்த வாக்கெடுப்பில் இந்தியா வாக்கு அளிக்காமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.