உலகை ஆளப்போகும் விளாடிமிர் புதின்.. யாராலும் தடுக்க முடியாது.. முன்கூட்டியே கணித்த பாபா வங்கா பாட்டி
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன்: நடக்கவிருப்பதை முன்பே கணிக்கும் பிரபல பாபா வாங்கா என்ற பாட்டி உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருவதை குறித்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குண்டு சத்தத்துக்கு நடுவில் நடந்த கல்யாணம்.. உக்ரைன் காதல் ஜோடி சொன்ன உருக்கமான தகவல்..!
பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா என்ற பாட்டி அவரின் 12 வயதில் சூறாவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார். அதிலிருந்து அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி இருப்பதாக கூறப்படுகிறது.
வைரஸ் தாக்கும்:
அவரின் 84 வயதில் பாபா வங்கா பாட்டி காலமானார். ஆனால் பாபா வங்கா பாட்டி இறப்பதற்கு முன்பே அவர் கணித்து வைத்துள்ளதாக கூறப்படும் 85% சம்பவங்கள் பலித்துள்ளதாக மக்களால் நம்பப்படுகிறது. இதற்கு முன்பு அமெரிக்காவில் நடைபெற்ற 9/11 தாக்குதல் குறித்தும், 2022-ம் ஆண்டு மக்களை புதுவித வைரஸ் தாக்கும் எனவும் கூறியிருந்தார்.
அதோடு, உலகில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும், அதிகப்படியான டிஜிட்டல் சாதன பயன்பாட்டினால் உலக மக்களுக்கு நிஜத்திற்கும், கற்பனைக்கும் இடையே குழப்பம் ஏற்படும் என பல விஷயங்களை கணித்திருந்ததாக தகவல்கள் வெளியாகின.
அதன்படியே இப்போதும் பாபா வங்கா எழுத்தாளர் வாலண்டின் சிடோரோவிடம் கூறிய கணிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதாவது, பாபா வங்கா இறப்பதற்கு முன்பு தெரிவித்த கணிப்புகளின் படி, ரஷ்யா உலகின் வல்லரசாக மாறும், ஐரோப்பாவின் நிலங்கள் வளமிளக்கும் என தெரிவித்திருந்துள்ளார்.
பல கணிப்புகள் உண்மை:
மேலும், ரஷ்யாவின் மகத்துவம் மற்றும் விளாடிமிர் புதினின் உலகை ஆளும் எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது என 1996-ம் ஆண்டு அவர் தெரிவித்துள்ளார். இதே ஆண்டு தான் தனது 86 வது வயதில் பாபா வங்கா பாட்டி காலமானார். 1999 டிசம்பரில் ரஷ்யாவின் தற்காலிக ஜனாதிபதியாக புதின் பதவியேற்ற பிறகு, அவர் ரஷ்ய அரசியலில் ஆதிக்கம் செலுத்தி உலக விவகாரங்களில் முக்கிய பங்கு வகித்தது நினைவு கூறப்பட்டு வருகிறது. பாபா வங்கா பாட்டி கூறிய பல கணிப்புகள் உண்மையாகியுள்ளது.
தற்போதைய வடிவத்தில் இருக்காது:
அதில் ஒன்று தான் 2016 ஆம் ஆண்டளவில் ஐரோப்பா அதன் தற்போதைய வடிவத்தில் இருக்காது எனக் கூறியிருந்தார். அதன்படியே ஜூன் 23, 2016ம் வாக்களிப்பு மூலமாக பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது. அதோடு, டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியான அவர், நாட்டை வீழ்த்தும் பேரழிவைச் சந்திப்பார் எனவும் கூறியிருந்தார்.
கடலில் மூழ்கியது:
ஆகஸ்ட் 1999ல் ரஷ்ய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான குர்ஸ்க் கடலில் மூழ்கும் என்றும், அதனால் முழு உலகமும் துக்கப்படும் என்றும் அவர் கணித்தார். அதன்படியே நீர்மூழ்கிக் கப்பல் ஆகஸ்ட் 2000-ல் பேரண்ட்ஸ் கடலில் மூழ்கியது, அனைத்து பணியாளர்களும் உயிரிழந்த சம்பவம் உலகையே உலுக்கியது.
இந்நிலையில் தான் புதின் பற்றிய பாபா வங்கா பாட்டியின் கணிப்புகள் இணையத்தில் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது.