ரஷ்யா-உக்ரைன் விவகாரம்.. ‘வன்முறை வேண்டாம்’.. பொதுமக்கள் இறக்குறதை பார்த்தா கவலையா இருக்கு.. தலிபான்கள் அறிக்கை..!
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு கவலையளிப்பதாக ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்யா அதிபர் புதின் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதனை அடுத்து உக்ரைன் நாட்டின் விமானப்படை, கடற்படை, ராணுவத் தளங்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன. ஏவுகணைத் தாக்குதலும் நடத்தப்படுகிறது.
இதில் உக்ரைன் தலைநகர் கீவ் பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. தலைநகரில் ரஷ்ய போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறப்பதால், அங்கு வசிக்கும் மக்கள் அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர். இதுவரை 100-க்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் இந்த போரில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் தலிபான் அரசும் இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தலிபான் அரசுவெளியிட்ட அறிக்கையில், ‘உக்ரைன்-ரஷ்யா விவகாரத்தை உற்று நோக்கி வருகிறோம். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்து கவலை கொண்டுள்ளோம். வன்முறையைத் தவிருங்கள். பொதுமக்கள் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை நீடிக்க வலியுறுத்துகிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
