காதலியை IMPRESS பண்ண இளைஞர் செஞ்ச காரியம்.. அலேக்காக தூக்கிய போலீஸ்.. அவசரப்பட்டுட்டியே குமாரு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனது காதலியை கவர, விமனப்படை அதிகாரிகள் அலுலகத்திற்குள் நுழைய முயற்சித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

Also Read | 'என்னோட ஹீரோ".. ஆனந்த் மஹிந்திரா போட்ட வைரல் ட்வீட்.. யாருப்பா இவரு..?
காதலில் விழுந்தவர்கள் தங்களது இணைக்கு எப்போதும் பரிசுகளை அளிக்க விரும்புவதை பார்த்திருப்போம். அதேபோல, அவர்களை கவர அதி பராக்கிரம காரியங்களில் இளைஞர்கள் ஈடுபவது குறித்தும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், உத்திர பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரேபடி மேலே போய், விமானப்படை அலுவலகத்திற்கு உள்ளேயே செல்ல முயற்சித்திருக்கிறார். இதனால் அவர் கைது செய்யப்பட்டு அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உத்திர பிரதேச மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்தவர் கவுரவ். 22 வயதான இவர் இதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் நட்பாக பழகி வந்திருக்கிறார். நாளடைவில் இது காதலாக மலர்ந்திருக்கிறது. இதனிடையே சமீபத்தில் இந்திய விமானப்படையில் அதிகாரியாக முயற்சி செய்துவருவதாக கவுரவ் தனது காதலியிடம் சொல்லியதாக தெரிகிறது. இதனை கேட்ட அந்த பெண் அதனை மறுத்ததுடன் அவர் அதிகாரியாக வாய்ப்பில்லை என கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால், கோபமடைந்த கவுரவ் விமானப்படை அலுவலகத்துக்குள் நுழைய முயற்சி செய்திருக்கிறார்.
பரிசோதனை
விமானப்படை அலுவலத்தின் வாசலில் இருந்த காவலர்கள் கவுரவ் உள்ளே செல்ல நுழையும்போது தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். அப்போது தான் ஒரு அதிகாரி என பொய் சொல்லியிருக்கிறார் கவுரவ். அதனை தொடர்ந்து அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கேள்விகள் எழுப்ப அவற்றுக்கு முன்னுக்குப்பின் முரணாக பதில் சொல்லியிருக்கிறார் கவுரவ். இதனால் சந்தேகமடைந்த அவர்கள் மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.
இதனையடுத்து விரைந்து வந்த அதிகாரிகள், கவுரவிடம் விசாரணை நடத்தவே தனது காதலியை கவர்வதற்காக விமானப்படை அலுவலகத்துக்குள் நுழைந்து செல்பி எடுக்க திட்டமிட்டதாக கூறியுள்ளார் கவுரவ்.
கைது
இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் துக்ளக் நகர காவல்துறையினருக்கு இதுகுறித்து தகவல் கொடுத்திருக்கின்றனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார் கவுரவை கைது செய்திருக்கின்றனர். அவர் மீது 140, 170, 171, 449 மற்றும் 447 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்திர பிரதேசத்தில் காதலியை கவர, விமானப்படை அலுவலகத்துக்குள் நுழைய முயற்சித்த இளைஞர் கைது செய்யப்பட சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
