விண்வெளி'ல இருந்து பாக்குறப்போ.. பூமி'ல தெரிஞ்ச பிரகாசமான புள்ளி.. "அது எந்த இடம் தெரியுமா?"
முகப்பு > செய்திகள் > உலகம்பரந்து விரிந்து கிடக்கும் இந்த பூமி என்பது மிகவும் அழகாகவும், அபூர்வமாகவும் தெரிந்தாலும், இதற்கு மேலே உள்ள வான்வெளி உலகம் கூட அதிகம் பிரமிப்பு நிறைந்தது தான்.

வான்வெளிக்கு அப்பால் உள்ள விண்வெளி, கிரகங்கள், நட்சத்திரம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில் கூட, ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி மூலம் நாசா விண்வெளி மையம் அடுத்தடுத்து வெளியிட்ட பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி மக்கள் பலரையும் மெய்சிலிர்க்க வைத்திருந்தது.
அதே போல, விண்வெளி வீரர்கள் பலரும் விண்வெளியில் இருந்து பல்வேறு ஆய்வுகளையும் மேற்கொண்டு வருவார்கள். மேலும், பூமிக்கு மேலே இருக்கும் விண்வெளியில் இருந்து, இரவு நேரத்தில் அவர்கள் பூமியை பார்க்கும் போது இங்கே உள்ள நகரங்கள், படகுகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் ஏதோ ஒரு ஒளிரும் விளக்கே போல தான் அவர்களுக்கு தோன்றும்.
ஆனால், பகல் நேரத்திலேயே பூமியில் உள்ள ஒரு பகுதி, ஒளிருவது போல விண்வெளியில் இருந்து பார்க்கும் போது தோன்றினால் எப்படி இருக்கும்?. அப்படி ஒரு புகைப்படத்தை தான் விண்வெளி வீராங்கனை ஒருவர் பகிர்ந்துள்ளார்.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி வீராங்கனை சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி, விண்வெளியில் இருந்து பூமியை பார்க்கும் போது பூமியில் உள்ள பிரகாசமான புள்ளி தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து அது என்ன என்ற விளக்கத்தையும் தன்னுடைய Twitter பதிவின் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.
சமந்தா பதிவிட்டுள்ள புகைப்படத்தின் படி, அதில் ஒளிரும் விளக்கு போல தோன்றுவது இஸ்ரேலில் உள்ள நெகேவ் என்னும் பாலைவனத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது பற்றி தனது கேப்ஷனில் குறிப்பிட்டுள்ள சமந்தா, "சுவாரஸ்யமான காட்சி!. நெகேவ் பாலைவனத்தில் உள்ள ஒரு பிரகாசமான புள்ளி. பகலில் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்றை விளக்குகளாக பார்ப்பது என்பது மிகவும் அசாதாரணமான ஒன்று. சூரியனில் இந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பெறுவதற்கான தொழில் நுட்பங்களில் ஒன்றாக இந்த சூரியன் உற்பத்தி நிலையம் உள்ளது. மேலும் உலகின் மிக உயரமான சூரிய மின் கோபுரங்களுடன் உள்ளது" என்றும் அவர் கூறி உள்ளார்.
விண்வெளியில் இருந்து பகல் நேரத்தில் பூமி மீது ஒளிரும் இடம் தொடர்பான புகைப்படம், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
