'இன்ஜீனியரிங் உள்ளிட்ட தொழில்நுட்ப கல்வி’... ‘இனி அவங்க, அவங்க தாய்மொழியிலேயே’... ‘மத்திய அரசின் புதிய அறிவிப்பு’...!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Nov 26, 2020 08:20 PM

வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் பயிலும் நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

IITs, NITs to offer engineering courses in mother tongue

மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன், அத்துறையின் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ‘பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப கல்விகளை, அவரவர் தாய்மொழியில் கற்கும் வகையில், அடுத்த கல்வியாண்டு முதல் (2021-2022), நடைமுறைப்படுத்தப்படுவதற்கான ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றன.

தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வியை வழங்க சில குறிப்பிட்ட ஐ.ஐ.டி. (IITs) மற்றும் என்.ஐ.டி.கள் (NITs) தேர்வு செய்யப்பட்டுள்ளன. புதிய கல்விக் கொள்கையின்படி (new National Education Policy -NEP) இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது’ என்று அவர் தெரிவித்தார்.

முதல்கட்டமாக ஐஐடி பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் (IIT BHU) பொறியியல் கல்வி இந்தி மொழியில் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலும் சில ஐஐடி, என்ஐடி, மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (IIT, NIT, All India Council for Technical Education (AICTE)) ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளிடம் ஆலோசனைக் கேட்டு அறிந்தப் பிறகு, மற்ற இடங்களில் தாய்மொழியில் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப கல்விகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் பொது நுழைவுத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (NTA), ஜேஇஇ (JEE) உள்ளிட்ட தேர்வுகளில், அதிகளவில் தாய்மொழிகளில் புதிய வினாத்தாள்களை உருவாக்குமாறு  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IITs, NITs to offer engineering courses in mother tongue | India News.