‘அனைத்து அரசுக் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கும்’...!!! ‘இலவச அதிவேக வைஃபை சேவை’...!!! ‘அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மாநிலம்’...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரகண்டில் அனைத்து அரசுக் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு இலவச அதிவேக வைஃபை சேவையை அம்மாநில முதல்வர் த்ரிவேந்திர சிங் ராவத் தொடங்கி வைத்தார்.
ஞாயிறன்று நடைபெற்ற விழாவில் உத்தரகண்ட் முதல்வர் த்ரிவேந்திர சிங் ராவத்தின் சொந்தத் தொகுதியான டொய்வாலாவில் உள்ள அரசு முதுகலைக் கல்லூரியில் இலவச அதிவேக வைஃபை சேவை முதன்முதலாகத் தொடங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து விழாவில் பேசிய முதல்வர் த்ரிவேந்திர சிங், ‘நாட்டிலேயே முதல்முறையாக உத்தரகண்ட் மாநிலத்தில் இலவச வைஃபை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கு இலவச மற்றும் அதிவேகமான வைஃபை சேவையை அளிக்கும் திட்டத்தைத் தொடங்கி உள்ளோம்.
மாணவர்களின் கல்விக்காகக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் இணையத் தொடர்பு, அவர்களின் வளர்ச்சியில் முக்கியப் பங்கை வகிக்கும். இந்த நடவடிக்கை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பை நோக்கிய பயணம் ஆகும். நவீனத்தையும் பழைமையையும் இணைக்கும் பகுதியின் ஓர் அங்கமாகவும் இது செயல்படும்' என்று அவர் கூறியுள்ளார்.
आज डोईवाला स्थित शहीद दुर्गामल्ल राजकीय स्नातकोत्तर महाविद्यालय से राज्य के सभी महाविद्यालयों में फ्री वाई-फाई कनेक्टिविटी का शुभारंभ किया। प्रदेश के महाविद्यालयों को हाई स्पीड इंटरनेट कनेक्टिविटी से जोड़ने वाला देश का प्रथम राज्य बनने पर प्रदेशवासियों को बधाई।
#FreeWiFi pic.twitter.com/mkdqge7ILE
— Trivendra Singh Rawat (@tsrawatbjp) November 8, 2020