“லாக்டவுன்ல வேலை, வருமானங்களை பலர் இழந்துருக்காங்க!”.. தனியார் கல்விக்கட்டணத்தில் 25% தள்ளுபடி - மாநில அரசு அதிரடி!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத் மாநிலத்தில் கட்டணத்தில் 25 சதவீதம் தள்ளுபடி செய்ய தனியார் கல்வி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

கொரோனா அச்சம் காரணமாக கடந்த 5 மாதங்களாக லாக்டவுன் இருந்ததால், பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணி புரிந்து வந்தோர் வேலை வருமானம் உள்ளிட்டவற்றை இழந்தனர். இதனிடையே கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டதால், நிர்வாக செலவுகளை சமாளிக்க சிரமப்பட்டன.
இதனிடையே பள்ளி, மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவியரின் பெற்றோர்களிடம் 75 சதவீதம் அளவிற்கு மட்டுமே கட்டண தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று, முழு கட்டணத்தை வசூலிக்க கூடாது என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் நிபந்தனைகளுடன் கூடிய 5-ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் வரும் 15ம் தேதி முதல் அந்தந்த மாநில அரசுகளே பள்ளிகளை திறப்பது குறித்து முடிவெடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே பெற்றோர்கள் , சி.பி.எஸ்.இ., ஐ.பி., ஐ.சி.எஸ்.இ., மற்றும் சி.எஸ்.இ.,உள்ளிட்ட தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் குஜராத் மாநில அரசின் கல்வித்துறை அமைச்சர் பூபேந்திர சிங் சூடாஸ்மா பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் மாணவர்களின் நலன்கருதி பள்ளிகட்டணத்தில் 25 சதவீதம் அளவிற்கு குறைத்து கொள்ளும் முடிவும் எடுக்கப்பட்டது.
அம்முடிவின் படி, வரும்31 ம் தேதிக்குள் கட்டணத்தில் 50 சதவீதம் செலுத்த வேண்டும் எனவும், ஏற்கனவே முழு கட்டணத்தை செலுத்தியவர்களுக்கும் அதற்கான சலுகைகள் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
