அமெரிக்கப் பொருளாதாரத்தில் இந்திய மாணவர்களின் ‘அசர வைக்கும்’ பங்களிப்பு.. ஆனாலும் 16 வருஷமா அந்த நாடுதான் ‘டாப்’!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்கப் பொருளாதாரத்தில் இந்திய மாணவர்கள் அதிகமாக பங்களிப்பு செய்துள்ளதாக அமெரிக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க கல்வி மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பணியகம் மற்றும் சர்வதேச கல்வி நிறுவனத்தின் 2019-20ம் ஆண்டுக்கான அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அதில், ‘அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 2019-20ம் ஆண்டில் 10,75,496-ஆக உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 1.8 சதவீதம் குறைவுதான். ஆனாலும் 5-வது ஆண்டாக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் படித்து வருகின்றனர்.
இந்த ஆண்டில் அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 4.4 சதவீதம் குறைந்துள்ளது. ஆனாலும் அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு ரூ.56.6 ஆயிரம் கோடி பங்களிப்பு செய்துள்ளனர். வழக்கம்போல அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களை பொறுத்தவரை சீனா தொடர்ந்து 16-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. 3.72 லட்சம் சீன மாணவர்கள் 2019-20 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் படிக்கின்றனர். இதில் 1,93,124 மாணவர்களுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
வங்கதேசத்தில் இருந்து அமெரிக்கா வந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இது பிரேசிலில் 4 சதவீதமும் நைஜீரியாவில் 3 சதவீதமும் அதிகரித்துள்ளது. ஆனால் சவுதி அரேபியாவில் மாணவர்களின் எண்ணிக்கை 17 சதவீதம் குறைந்துள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
