பள்ளிகளை திறக்கலாமா?.. வேண்டாமா?.. தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!.. திடீர் திருப்பம்!.. என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து வருகிற நவம்பர் 9-ந் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடத்த அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், ஊரடங்கை வரும் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
மேலும், பள்ளிகளில் வரும் 16ஆம் தேதி முதல் 9,10,11,12-ம் வகுப்புகள் தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தார். அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த கூட்டம் வருகிற நவம்பர் 9-ந் தேதி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 9-12ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் நவ-9ந் தேதி அன்று காலை 10 மணிக்கு கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்க இயலாதோர் கடிதம் வாயிலாக கருத்துகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
