'ஆடம்பர பார்ட்டி... அடுத்தடுத்து மரணம்...!' - மரண பீதியில் மற்ற 'நகைக்கடை உரிமையாளர்கள்'! - அதிர்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு முழுவதும் கொரோனா தோற்று கடுமையாக அச்சுறுத்தி வரும் நிலையில், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் நேற்று ஒரே நாளில் 1600 பேர் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், இன்னொரு அதிர்ச்சி தகவலாக பிரபல நகைக்கடை உரிமையாளர் ஒருவர் கொரோனா மூலம் உயிரிழந்துள்ளார். ஹிமாயத்நகர் பகுதியில் நகைக்கடை ஒன்றை நடத்தி வரும் நிலையில், சில தினங்களுக்கு முன் அவர் ஆடம்பரமான பிறந்தநாள் விழா ஒன்றை நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் நகரங்களின் பிரபல நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உட்பட சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த ஆடம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றொரு நகைக்கடை உரிமையாளர் ஒருவரும் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அங்கு கலந்து கொண்ட நபர் ஒருவரின் மூலம் அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. நகைக்கடை உரிமையாளர்கள் இரண்டு பேர் கொரோனா தொற்று மூலம் உயிரிழந்த தகவல் வேகமாக பரவ, பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பதறியடித்துக் கொண்டு பரிசோதனை செய்ய சென்றுள்ளனர்.
பொது நிகழ்ச்சிகளில் அதிகம் பேர் கலந்து கொள்ளக்கூடாது என அரசு அறிவுறுத்தியும் சுமார் 100 பேர் வரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் காரணமாக கொரோனா தொற்று ஏற்பட்டு நகைக்கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
