'இந்தியர்களோட மூளையோ மூளை'... எப்படி எல்லாம் 'திங்க் பன்றாங்க'... ஆச்சரியப்பட்ட பிரபலம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | May 22, 2019 02:15 PM
இந்தியர்களின் திறமைக்கு இது மிகப்பெரிய சான்று என,மஹிந்திரா குரூப்பின் நிறுவனரான ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.
தேவைதான் கண்டுபிடிப்பின் தாய் இதோ இந்தியர்களின் கண்டுபிடிப்பு என ஆனந்த் மஹிந்திரா வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.அதில் விவசாயிகள் கயிற்றுக் கட்டிலை எஸ்கவேட்டராக பயன்படுத்துகின்றனர். இதுதான் பண்ணை மற்றும் கட்டுமானத் துறையில் புதிய யுக்தி என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.இந்த வீடியோவை இதுவரை 6,000 பேர் பகிர்ந்துள்ளார்கள்.
வீடியோவின் கீழ் கமெண்ட் செய்துள்ள பலரும் ஒரு கட்டிலை இவ்வாறு எல்லாம் பயன்படுத்த முடியுமா என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
I think the phrase ‘Necessity is the mother of invention’ was invented by Indians! Here’s a new product our Farm & Construction sectors will have to consider as a replacement for an excavator: A ‘Khatiya-vator’. #whatsappwonderbox pic.twitter.com/av3qNdIAHd
— anand mahindra (@anandmahindra) May 21, 2019