“மினி தோட்டத்திற்குள் அமர்ந்து சவாரி செய்யும் பயணிகள்”!... அசத்தும் பேருந்து ஓட்டுநர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Arunachalam | May 06, 2019 12:51 PM
ஓடும் பேருந்துக்குள் மினி தோட்டத்தை அமைத்து அதை பராமரித்து வரும் அரசு பேருந்து ஓட்டுநரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இயற்கையை பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இயற்கையை விரும்பும் வன ஆர்வலர்கள் தங்கள் வீட்டை சுற்றி மரம், செடி கொடிகளால் பசுமை தோட்டத்தை உருவாக்குவார்கள். மேலும், வீட்டை சுற்றி இடம் இல்லாதவர்கள் தங்கள் வீட்டின் மாடியில் தோட்டம் அமைப்பார்கள்.
இந்நிலையில், பெங்களூருவில் அரசு பேருந்து ஓட்டுநரான நாராயணப்பா, பெங்களூரில் இருக்கும் பைலாசந்த்ரா - யஷ்வந்த்பூர் மார்க்கத்தில் பேருந்து ஓட்டி வருகிறார். இயற்கை மீது ஆர்வம் கொண்டவரான இவர் தான் ஓட்டிச் செல்லும் பேருந்தில் ஒரு மினி தோட்டத்தை அமைத்து அதை பராமரித்து வருகிறார்.
இதுகுறித்து பேசிய நாராயணப்பா சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக பேருந்தில் மினி தோட்டத்தை அமைத்து அதை பராமரித்து வருவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், ஓடும் பேருந்துக்குள் இருக்கும் மினி தோட்டத்துக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.