வளர்ப்பு நாய்களை உடனடியாக ஒப்படைக்க அதிபர் கிம் உத்தரவு!... வடகொரிய மக்கள் அதிர்ச்சி!.. என்ன காரணம்?.. பகீர் தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்வடகொரியாவில் இறைச்சி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வளர்ப்பு நாய்களை ஒப்படைக்க வேண்டுமென அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.

வடகொரியாவில் உள்ள 25.5 மில்லியன் மக்களில் 60 சதவீதம் பேர் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் என்று ஐ.நா சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. உணவு பற்றாக்குறை பிரச்னை காரணமாக அதிபர் கிம் ஜாங் உன் நாட்டு மக்களிடம் அதிருப்தியை பெற்று வருகிறார்.
வடகொரியாவில் நிலவும் உணவுப்பற்றாக்குறை குறித்து அதிபர் கிம் ஜாங் உள் அந்நாட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனிடையே, வடகொரியாவில் இறைச்சி பற்றாக்குறை காரணமாக மக்கள் தங்களது வீட்டில் வளர்க்கும் நாயை ஒப்படைக்க வேண்டுமென கிம் ஜூலை மாதத்தில் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதை தொடர்ந்து, அதிகாரிகள் செல்லப் பிராணியான நாய்களை வளர்க்கும் வீடுகளை கண்டறிந்து வருகின்றனர். அவற்றை கொடுக்கும்படி கட்டாயப்படுத்தியும், பலவந்தமாக பறிமுதல் செய்தும் வருகின்றனர். அவற்றில் சில நாய்கள் அரசு நடத்தும் உயிரியல் பூங்காவிற்கும், இறைச்சி கடைகளுக்கும் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
