"வழக்கம் போல தெரு 'நாய்'க்கு சாப்பாடு குடுத்துட்டு இருந்தோம்"... அப்போ அந்த பாலத்துக்கு பக்கத்துல... ஒருத்தரு 'நாயை' புடிச்சு,,.. '40' வயது நபரின் கொடூர செயலால் உறைந்து நின்ற இளைஞர்கள்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலத்தில் 40 வயது நபர் ஒருவர் பெண் நாய் ஒன்றிடம் தவறாக நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியை சேர்ந்த 40 வயது நபர் ஒருவர், தனக்கு கிடைக்கும் வேலைகளை செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், அப்பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள், அங்குள்ள தெரு நாய்களுக்கு வழக்கமாக உணவளிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். அப்போது அந்த 40 வயது நபர், அங்குள்ள பாலம் ஒன்றின் அருகே பெண் நாய் ஒன்றை பாலியல் வன்கொடுமை செய்து கொண்டிருப்பதை கண்டு இளைஞர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக, இதுகுறித்த தகவலை விலங்கு உரிமை ஆர்வலர் அதிதி நாயர் என்பவரிடம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, அதிதி போலீசாரிடம் புகாரளித்துள்ளார். ஆனால், உடனடியாக இது தொடர்பாக போலீசார் புகாரை எடுத்துக் கொள்ள தாமதம் காட்டியுள்ளனர். இதனால் கமிஷனர் உதவியுடன் அதிதி இது தொடர்பான புகாரை வேகமெடுக்க செய்துள்ளார். தொடர்ந்து, அந்த நபரை கைது செய்த போலீசார், அவர் மீது விலங்குகளை வன்கொடுமை செய்ததற்காக இரண்டு பிரிவுகளில் வழக்கை பதிவு செய்தனர்.

மற்ற செய்திகள்
