'மறக்காம ஓட்டு போட வாங்க'...'சூப்பர் ஆஃபர அள்ளிட்டு போங்க'...தமிழ்நாடு ஹோட்டல் சங்கம் அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 10, 2019 12:11 PM

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

On election day, voters in TN can avail a 10% discount on their bill

தமிழ்நாட்டில் வரும் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.இதற்காக பல்வேறு கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.தேர்தல் ஆணையமும் மக்கள் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.பல்வேறு பிரபலங்களும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு காட்சிகளில் பேசி வருகிறார்கள்.

இதனிடையே தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கமும் மக்களை வாக்களிப்பதற்கு ஊக்குவிப்பதற்காக தங்களால் ஆன முயற்சியினை எடுத்துள்ளது.அதன்படி வரும் 18ஆம் தேதி தேர்தலில் வாக்களிப்பவர்கள் ஓட்டல் பில்களில் 10% தள்ளுபடி பெற்றுகொள்ளலாம் என அறிவித்துள்ளது.இந்த தள்ளுபடியை மக்கள் தங்களில் கை விரலில் உள்ள மை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த தள்ளுபடி சலுகை சரவணபவன், சங்கீதா, ஹாட் சிப்ஸ், வசந்த பவன் உள்ளிட்ட முன்னனி ஓட்டல்களிலும் செல்லும். மேலும் இந்தத் தள்ளுபடி சலுகையை மக்கள் மாலை 6 மணிக்கு பிறகு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #LOKSABHAELECTIONS2019 #TAMIL NADU HOTELS ASSOCIATION