ஒரே தட்டில் சாப்பிடும் தோனி, ஜாதவ்.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Apr 15, 2019 05:43 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனியும், கேதர் ஜாதவும் ஒரே தட்டில் சாப்பிடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

kedar jadhav feeds ms dhoni from his plate after win eden garden match

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஞாயிறன்று நடந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் குவித்தது. அடுத்துக்களமிறங்கிய சென்னை அணி, ரெய்னா, ஜடேஜா ஆகியோரின் அதிரடியால் 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் இரவு உணவு சாப்பிடச் சென்றனர். அப்போது தோனியும், கேதர் ஜாதவும் ஒரே தட்டில் சாப்பிடும் வீடியோவை கேதர் ஜாதவ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'ப்ரோமான்ஸ்' என்று பதிவிட்டுள்ளார். ஜாதவ், தனது தட்டில் இருக்கும் உணவை தோனிக்கு ஊட்டிவிடுகிறார். பின்னர் தானும் உண்கிறார். 

இருவரும், ஏற்கனவே நண்பர்கள் என்பது ரசிகர்களுக்கு தெரிந்தாலும், இந்த வீடியோவில் தோனியும், ஜாதவும் மிகவும் நெருங்கிய நண்பர்களாகவே தோன்றுகின்றனர். இந்த வீடியோ தற்போது  சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Bromance ❤️

A post shared by Kedar Jadhav (@kedarjadhavofficial) on