'லஞ்ச்' சாப்பிட்டு 'தூங்கினது' ஒரு தப்பா சார்...? அதுக்கு போய் 'இப்படியா' பண்ணுவாங்க...? - கதறும் மனைவி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெண் குழந்தை பெற்றுக்கொடுத்த காரணத்தால் மனைவியை விரட்டியடித்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஷாஹிபாக் பகுதியில் வசித்து வரும் பெண் 24 வயதான பெண் ஒருவர் தன் கணவர் மீதும் அவரின் குடும்பம் மீஷும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
திருமணமான சில நாட்கள் நன்றாக சென்று கொண்டிருந்த தம்பதிகளின் வாழ்க்கையில் நாட்கள் செல்ல செல்ல சண்டை சச்சரவுகள் அதிகரித்துள்ளன. தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமியாரும், கணவரும் சேர்ந்து அந்த பெண்ணை அடிக்கடி கொடுமைப்படுத்தியுள்ளனர்.
பல வருடங்களாக நடந்த கொடுமையை தாங்க முடியாத பாதிக்கப்பட்ட பெண் தற்போது பெண் மாதவ்புரா காவல் நிலையத்தில், தனது கணவர் மற்றும் மாமியார் மீது குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் 'என் கணவர் மற்றும் என் மாமியார் என்னை பல ஆண்டுகளாக கொடுமைக்கு உட்படுத்தி வருகின்றனர். ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி என் மாமியார் என்னை அடிக்க செய்வார்
நான் பகல் நேரத்தில் சாப்பிட்டுவிட்டு உறங்கினால் அது பிடிக்காமல் அவரது மாமியார் அவரை அடித்து துன்புறுத்தி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே இந்த பிரச்சினைக்காக காவல் நிலையம் வரை சென்றேன்.
அந்நேரம் போலீசார் எங்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனால் நான் ஆண் குழந்தையை பெற்றெடுக்காமல் இருப்பதற்கும் என்னை அவர்கள் கொடுமைப்படுத்தி வந்தனர்.
இப்போது கடந்த பிப்ரவரி மாதம் என் கணவர் என்னை என் அம்மா வீட்டிற்கு விரட்டி அடித்தார். எங்கள் ஊர்த் தலைவர்கள் சமரசம் செய்ய முயன்றும் என் கணவர் வீட்டார் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. இதுவரை என் கணவர் வீட்டார் பல கொடுமைகளை எனக்கு செய்துள்ளனர்' என குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் வீட்டாரை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
