VIDEO: என்னங்க 'இத' போய் மிக்ஸ் பண்றீங்க...? 'அதனால தான் கூட்டம் சும்மா அள்ளுது...' 'இப்படி ஒரு ஆம்லெட் எங்க தேடினாலும் கிடைக்காது...' - வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத் மாநிலத்தில் ஆம்லெட் செய்ய குளிர்பானம் பயன்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக முட்டையை பலவிதங்களில் தயாரித்து உண்பது வழக்கம். வேகவைத்த முட்டை, ஆம்லெட், பொடிமாஸ், ஆஃப்பாயில் என பலவிதங்களில் செய்து சாப்பிடுவோம். இதில் பெரும்பாலும் வெங்காயம், பச்சை மிளகாய் போன்ற பொருட்கள் போடப்படும். முட்டையில் குழம்பு ஊற்றி 'கலக்கி' எனவும் உணவகங்களில் விற்பதுண்டு.
ஆனால் குஜராத் மாநிலம், சூரத் நகரில் இயங்கி வரும் ஒரு ரோட்டு கடையில் தயார் செய்யும் ஆம்லெட்டில் முட்டையுடன் சேர்த்த பொருள் தான் சமூக வலைதளங்களில் தற்போது டிரென்டிங் ஆகி வருகிறது.
முட்டையுடன், வெங்காயம், மசாலப்பொடிகள், புதினா சட்னி போன்றவற்றுடன் ஃபான்டா குளிர்பானத்தையும் கலந்து தயாரிக்கப்படுகிறது. இந்த ஆம்லெட் ரூபாய் 250-க்கு விற்கப்படுகிறது. இந்த ஆம்லெட்டை உணவுப் பிரியர்கள் நீ, நான் என்று போட்டிப்போட்டு வாங்கி உண்கின்றனர். விற்பனை படுஜோராக இருப்பதால் உணவக உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த ஃபான்டா சேர்த்த ஆம்லெட் மட்டுமல்லாமல், முட்டை டிக்கா மற்றும் முட்டை கலக்கி என்ற முறையில் தயாரிக்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
