'தீபாவளி கிஃப்ட்'க்கு எப்போவும் போல ஸ்வீட், போனஸ் தருவேன்னு நினைச்சீங்களா...? 'இந்த தடவ ஸ்பெஷல் கிஃப்ட்...' 'மாஸ் காட்டிய நிறுவனம்...' - துள்ளி குதித்த ஊழியர்கள்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்குஜராத்தை சேர்ந்த தொழில் நிறுவனர் ஒருவர் தீபாவளி பரிசாக தங்கள் ஊழியர்களுக்கு அளித்த ஸ்பெஷல் கிஃப்ட் ஊழியர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகவே பண்டிகை நாட்களில் நிறுவனத்தின் தலைவர் தங்கள் ஊழியர்களுக்கு இனிப்பு, பரிசு பொருட்கள், போனஸ் அளிப்பது வழக்கம். ஆனால், பிரபல நிறுவனத்தின் தலைவர் சுபாஷ் அளித்த பரிசு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது என்று தான் சொல்லவேண்டும்
குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த சுபாஷ் தவார் என்பவர் ஆடை தொழில் நடத்தி வருகிறார். இவரின் நிறுவனத்தில் சுமார் 35 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுபாஷ் தன்னுடைய 35 ஊழியர்களுக்கு இ-ஸ்கூட்டர்களைப் பரிசாக அளித்துள்ளார். இந்த சம்பவம் ஊழியர்களின் குடும்பத்தாருக்கு வார்த்தைகளால் சொல்ல இயலாத அளவிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கூறும் சுபாஷ், 'அதிகரித்து வரும் பெட்ரோல் விலையைக் கருத்தில் கொண்டு இந்தப் பரிசை எங்கள் ஊழியர்களுக்கு வழங்கியுள்ளோம்' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
