இதை பண்றதால மட்டும் ‘ஓமிக்ரான்’ வைரஸ் பரவலை தடுத்திட முடியாது.. உலக சுகாதார அமைப்பு கொடுத்த எச்சரிக்கை..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஓமிக்ரோன் வைரஸ் பரவலை பயணத் தடைகள் மூலம் கட்டுப்படுத்தி விட முடியாது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரானா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த சூழலில் ‘ஓமிக்ரோன்’ என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை கவலைக்குரிய வைரஸ் உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், இஸ்ரேல், இத்தாலி, செக் குடியரசு, ஹாங்காங், ஆஸ்திரேலியா, கனடா, உள்ளிட்ட நாடுகளில் ஓமிக்ரோன் வைரஸ் பரவி உள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயண கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.
இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு முக்கிய தகவலை தெரிவித்துள்ளது. அதில், ‘பயணத் தடைகள் மூலம் ஓமிக்ரோன் வைரஸ் பரவலை சர்வதேச அளவில் தடுத்துவிட முடியாது. பயணத் தடையால் மக்களின் இயல்பு வாழ்க்கையும், அவர்களது வாழ்வாதாரமும் தான் பெரும் பாதிப்பு ஏற்படும்.
எதிர்காலத்தில் நோய் தொற்றுகளை எதிர்த்துப் போராட சர்வதேச உடன்படிக்கை அவசியம். ஆபத்துக்களை நீக்கும் வகையில் விரைவில் சர்வதேச அளவில் அத்தியாவசிய சுகாதாரம் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்’ என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.