"நடுராத்திரி நேரம்"... நல்லா தூக்கத்துல இருந்தப்போ... "நெஞ்சு மேல என்னடா 'WEIGHT'ன்னு கண்ண தொறந்து பாத்தா"... திடுக்கிட வைத்த 'காட்சி'!!,,.. மரணப்பிடியில் 'திக் திக்' நிமிடங்கள்!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத் மாநிலம், அமரேலி மாவட்டத்தில் அமைந்துள்ள அபாரம்பரா என்னும் கிராமத்தை சேர்ந்தவர் விபுல் கேளையா. இவர் தனது குடிசை வீட்டில் இரவு நேரம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென நள்ளிரவு நேரத்தில், அவரது மார்புப்பகுதி மீது திடீரென அதிக கணம் இருப்பதாக உணர்ந்தார். இந்நிலையில், நடு சாமத்தில் கண் விழித்து பார்த்த விபுலிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது, பெண் சிங்கம் ஒன்று விபுலின் நெஞ்சு மீது கால் வைத்து கொண்டு நின்று கொண்டிருந்தது.
இருந்த போதும், அதிகம் பதறாத விபுல், தனது முழு உடல் வலிமை மொத்தத்தையும் கூட்டி, தனது நெஞ்சின் மீது இருந்த சிங்கத்தின் காலை விலக்கியுள்ளார். தான் தேடி வந்த இரை அதிக வலிமையுடன் இருப்பதை உணர்ந்த அந்த சிங்கம், மறுபடியும் விபுலை தாக்க முயற்சிக்காமல், அங்கிருந்து பின்வாங்கி காட்டுப் பக்கம் சென்று விட்டது.
மரணத்திற்கு அருகில் சென்று திரும்பிய பரபரப்பான நிமிடங்கள் குறித்து விபுல் கூறுகையில், 'தனக்கு இரையாக என்னை தேர்ந்தெடுத்ததில் அந்த பெண் சிங்கம் மிகப்பெரிய தவறு செய்து விட்டது. அதே போல சரியான நேரத்தில் நான் முழித்துக் கொண்டதால் அதனை எதிர்த்து போராட முடிந்தது' என தெரிவித்துள்ளார்.
சிங்கங்கள் நடமாட்டம் அப்பகுதியில் இருப்பதாகவும், குறிப்பாக கால்நடைகளை சிங்கங்கள் அதிகம் இரையாக்கும் என அங்குள்ளவர்கள் தெரிவிக்கும் நிலையில், முதல் முறையாக தற்போது மனிதர் ஒருவர் மீது தாக்குதல் நடத்த முற்பட்டது அப்பகுதி கிராம மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
