BIGG BOSS 6 TAMIL : "எதே மறுபடியுமா?".. அமுதவாணன் சொல்லிய விஷயம்.. அரண்ட GP முத்து..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Oct 19, 2022 10:44 AM

பிக்பாஸ் வீட்டுக்குள் நேற்று தனது நடன அசைவுகள் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தார் GP முத்து. அதைத் தொடர்ந்து மீண்டும் நடனமாடும்படி GP முத்துவிடம் சொல்லியிருக்கிறார் சக போட்டியாளரான அமுதவாணன். இதனால் முத்து திகைத்துப் போகிறார்.

Amudhavanan insist GP Muthu to Dance again Biggboss House

கடந்த வாரம் கோலாகலமாக துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 பல்வேறு போட்டிகள், வேடிக்கையான விவாதங்கள் என விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதனை மக்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் பார்த்து ரசித்து வருகின்றனர்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டனுக்கான டாஸ்க்கில் சாந்தி, ஜி.பி. முத்து மற்றும் ஜனனி ஆகியோர் களமிறங்கினர். இறுதியில் ஜி.பி. முத்து வெற்றி பெற்று கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று பிக்பாஸ் வீட்டுக்குள் GP முத்து நடனமாடி அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து GP முத்து தனது படுக்கையில் அமர்ந்திருக்க, அப்போது அங்குவரும் அமுதவாணன்,"ரெஸ்ட் எடுங்க வாத்தியாரே நாளைக்கு ஸ்டேஜ் ஏறனும்" என்கிறார். இதனை கேட்டு திகைத்துப்போன முத்து,"எதுக்கு மறுபடியும்?" என கேட்கிறார். இதற்கு சிரித்தபடியே பதில் அளிக்கும் அமுதவாணன்,"போட்டியில ஜெயிச்சவங்கள மட்டும் மறுபடியும் ஸ்டேஜ் ஏற சொல்லுவாங்க. அதுல இருந்து வெற்றிபெற்றவங்களை செலெக்ட் செய்வாங்க" என ஜாலியாக சொல்ல, GP முத்து அவர்களை திகைத்தபடி பார்த்துக்கொண்டிருக்கிறார்.

 

Tags : #BIGGBOSS6 TAMIL #GP MUTHU #AMUDHAVANAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Amudhavanan insist GP Muthu to Dance again Biggboss House | Tamil Nadu News.