1000 டன்னுக்கும் மேல லோடு.. 448 டயர்கள்.. ட்ரக்-ல இருக்க பொருளுக்காக தான் இவ்ளோ போராட்டமே.. திகைக்க வைக்கும் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆயிரத்துக்கும் மேற்பட்ட டன் எடையுள்ள பொருளுடன் தனது 11 மாத நீண்ட பயணத்தில் இருக்கிறது பிரம்மாண்ட ட்ரக் ஒன்று.
Also Read | கேரளா - இரண்டாவது பெண் பலியான பின்.. குற்றவாளி போட்ட பதிவு?.. திடுக்கிட வைத்த பின்னணி!!
பொதுவாக பிரம்மாண்டமான பொருட்களை ஏற்றிச்செல்ல கனரக வாகனங்களை பயன்படுத்துவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், அதேவேளையில் எடுத்துச் செல்லப்படும் பொருளின் அளவும் எடையும் தான் சுமந்து செல்லும் வாகனத்தையும் தீர்மானிக்கும். அதுமட்டும் அல்ல, இந்த கனரக வாகனத்தில் உள்ள பொருள் உயரம் அதிகமாக இருப்பின், சாலைகளில் இருக்கும் மின் மற்றும் பிற வயர்களில் அது உரசிவிடாமலும் பாதுகாக்க வேண்டும். சாதாரண கனரக வாகனங்களுக்கே இத்தனை சவால்கள் என்றால், கிட்டத்தட்ட 1000 ற்கும் அதிகமான டன் எடைகொண்ட பொருளை தூக்கிச் செல்லவேண்டும் என்றால்? நிச்சயம் சவாலான பணிதான். அத்தகைய பணியில் தான் ஈடுபட்டு வருகிறது ட்ரக் ஒன்று.
குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து ராஜஸ்தானில் உள்ள பச்பத்ரா சுத்திகரிப்பு ஆலைக்கு சென்று கொண்டிருக்கிறது இந்த பிரம்மாண்ட ட்ரக். இதன் மேலே 1148 டன் எடை கொண்ட கொதிகலன் உள்ளது. எடைக்கு தகுந்தபடி மிகப் பெரியதாக இருக்கும் இந்த ட்ரக்கில் மொத்தம் 448 டயர்கள் உள்ளன. வழக்கமாக குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து ராஜஸ்தானில் உள்ள பச்பத்ரா சுத்திகரிப்பு ஆலைக்கு செல்ல 11 முதல் 12 மணிநேரங்கள் தான் ஆகும்.
ஆனால், இந்த ட்ரக் 11 மாதங்களாக பயணத்தில் உள்ளது. இன்னும் பச்பத்ரா சுத்திகரிப்பு ஆலைக்கு இந்த ட்ரக் சென்றுசேர ஒன்றரை மாதங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது. இதற்கு காரணம் சந்தேகமே இல்லாமல் இதன் எடை தான். போக்குவரத்து நெரிசலை தவிர்த்தல், சாலையில் உள்ள மின் கம்பிகளின் உயரத்தை கணக்கிடுதல் போன்ற பணிகளுக்காக இந்த ட்ரக்குடன் பேர் கொண்ட குழுவும் பயணத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்த குழு, ட்ரக் செல்லும் பாதையில் முன்கூட்டியே சென்று போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவண்ணம் பார்த்துக்கொள்கிறது. அதேநேரத்தில் அதீத எடை காரணமாக பாலங்களில் இந்த ட்ரக் பயணிக்க முடியாதாம். ஆகவே, மாற்று வழிகளை கண்டறிந்து செல்லும் நிலைமையும் சில சமயங்களில் ஏற்படும் எனச் சொல்லப்படுகிறது. இத்தனை சவால்களுடன் பயணிக்கும் இந்த ட்ரக் ஒரு நாளைக்கு 10 முதல் 15 கிலோமீட்டர் வரையில் செல்கிறது. இன்னும், ஒன்றரை மாதங்களில் இந்த ட்ரக் தனது இலக்கை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சாலையில் இந்த ட்ரக்கை பார்க்கும் மக்கள் ஆச்சர்யத்தில் மூழ்கிவருகின்றனர்.
Also Read | எதே இட்லிக்கு ATM-ஆ.. பட்டனை தட்டினால் சூடாக இட்லிகளை பரிமாறும் இயந்திரம்.. நெட்டிசன்களை ஈர்த்த வீடியோ..!